மோகனின் எண்ணங்கள்

Archive for ஓகஸ்ட் 2008

இந்த வாரச் செய்திகள்

நகைச்சுவை(அல்லது அதிர்ச்சி) செய்திகள்:

சென்ற வாரம் (24/ஆகஸ்ட்) கலைஞர் தொலைக்காட்சியில் “டாப் 10 படங்களில்” இரண்டாமிடத்தைப் பிடித்த படம் எதுவென்றுத் தெரியுமா? உளியின் ஓசை (மக்களே அழாதீங்க, என்ன பண்றது?)

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பேன்: சொன்னது யாரு? சுப்பிரமணியசாமி! (அதிர்ச்சியடையாதீங்க)

ஏக்கச் செய்திகள்

வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர் (இப்படி சொன்னாலாவது யாராவது என்னுடைய கட்சிப் பற்றி பேசுங்களேன். இல்லை திட்டியாவது ஒரு அறிக்கை விடுங்களேன்)

குழப்பச் செய்திகள்

பாமக இல்லாததால் திமுக பலவீனமடையவில்லை: கருணாநிதி – யாஹூசெய்திகள்

பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கருணாநிதி – தட்ஸ்தமிழ் செய்திகள்

சாதா செய்திகள்

கோவை அருகே நடைபெற்ற டைரக்டர் சீமான் கூட்டத்தில் சோடாபாட்டில் வீச்சு (இப்போ நான் என்ன செய்ய என்றுக் கேட்கிறார் சீமான்)

ஸ்பெஸல் சாதா செய்திகள்

ரங்கசாமி மீது ஆளுநரிடம் அமைச்சர்கள் புகார்

கவிழும் கப்பல்: கம்யூனிஸ்டுகளுக்கு வாசன் பதிலடி (அப்போ நீங்க)

நம்பினால் நம்புங்கள் செய்திகள்

இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை குறைகிறது உலக வங்கி தகவல் (ஆனால் பரம ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு)

உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்! – தட்ஸ்தமிழ்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் (கர்நாடகாவில் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிந்தப் பின்பு)

காங்கிரஸ் தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: கே.வி.தங்கபாலு! (நோ கமெண்ட்ஸ்)

கற்பனைச் செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக வைகோவைத் தேர்ந்தெடுத்தார் ஒபாமா

திரையரங்கு உரிமையாளர்கள் புதுத்தீர்மானம்: படம் பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் டிக்கெட் பணம் திருப்பித்தரப்படும்.

பின் குறிப்பு:
()யில் உள்ளவை என்னுடைய எண்ணங்கள்/கற்பனை.

ஒலிம்பிக்ஸ் 2008, நேற்றோடு இனிதே முடிந்தது. அதிக தங்க பதக்கங்களைப் (51) பெற்று முன்னிலையில் இருக்கிறது சீனா. ஆனால் அதற்கு அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் படும் கஷ்டங்களைப் பாருங்கள். சின்ன வயதில் அவர்கள்‌ விருப்பம் என்னவென்று கூடக் கேட்காமல் அவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பயிற்சிக் கொடுத்து அவர்களை பதக்கங்களுக்கு தயார்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? ஒருவேளை இவ்வீரர்கள் பதக்கம் பெறவில்லையென்றால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

இப்படங்கள் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

சீன அரசு பதக்கங்களைப் பெறுவதற்கு இப்படி கஷ்டப்படுகின்றது என்றால், நமது இந்திய அரசு பதக்கங்கள் ஏதும் நாம் பெற்றுவிடக்கூடாது என்று முடிவில் இருக்கிறதோ? சீன அரசு மாதிரி யாரையும் கட்டாயப்படுத்தி விளையாட்டில் ஈடுப்படுத்த சொல்லவில்லை. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சியும் பண உதவியும் தந்து ஊக்கமளிக்கலாமே?

முடிந்தது ஒலிம்பிக்ஸ், ஆனால் சீனக்குழந்தைகளின் கஷ்டங்கள் தொடருகிறது/தொடரும்?

இன்று நடந்த இரண்டு விஷயங்களை பற்றியே இவ்விடுகை.

முதல் விஷயம், இன்று காலை பணம் எடுக்க ATM போன போது, என்னுடைய பைக்-ஐ
“No parking” நிறுத்தி விட்டு பணம் எடுத்து விட்டு வண்டி எடுக்க போகும் போது போக்குவரத்து காவலர், ஒரு வாகனத்தோடு வந்து “No Parking” ல் இருந்த வண்டிகளை எடுத்து அவ்வாகனத்தில் ஏற்ற சொன்னார். அவர்கள் முதலில் கை வைத்தது என் வண்டியில் தான். நான் போக்குவரத்து காவலரிடம் “அய்யா தெரியாமல் நிறுத்தி விட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று மன்றாடி அவரை சமாதானப்படுத்தி  எப்படியோ என் வண்டியை எடுத்துக் கொண்டு விவேக் பாஷையில் எஸ்கேப்ப்ப்ப். இத்தனைக்கும் என் வண்டி தமிழ்நாடு பதிவு எண் உடையது. அக்காவலர் வாழ்க. தமிழ்நாட்டை சேர்ந்த வண்டிகள் என்றால் கர்நாடகா போக்குவரத்து காவலர்கள் ஒரு பாசத்துடன் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணம் இப்போது எனக்கு சற்று மாறி உள்ளது. (ஒரு வேலை அக்காவலர் தமிழகத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாமோ)

இரண்டாவது என்னுடைய பிஎஸ்என்எல்  தொலைபேசி உண்மையிலே தொல்லை பேசியாக தான் இருக்கிறது. அதிலுள்ள  பிரோட்பேண்ட் இணைப்பு திருப்திகரமாக இல்லை என்பதால் அந்த இணைப்பை நீக்க என்ன வழி என்று கேட்டால் அதற்கு ஒரு கடிதம் கமர்சியல் ஆபிசர்-டம் கொடுக்க வேண்டுமாம். அக்கடிதம் எழுதி ஒரு 25 நிமிடம் வரிசையில் நின்று கொடுத்து விட்டு வந்துள்ளேன். இதற்கு சுலபமான வழியே இல்லையா? இதோடு ஏர்டெல் சேவையை ஒப்பிட்டால் ஏர்டெல் சேவை பிரமாதமோ பிரமாதம். பிஎஸ்என்எல் மாற வாய்ப்பே இல்லையா?

குறிச்சொற்கள்: , , ,

அஸின் சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில்:

“போக்கிரி’, “வேல்’ ஆகிய வெற்றி பெற்ற படங்களின் ஹீரோயினான பிறகும் கோலிவுட்டுக்கு குட்பை சொல்லி விட்டீர்களே?

அதெப்படி முடிவு செய்தீர்கள். ஹிந்தி “கஜினி’ படம் மற்றும் சில புராஜெக்ட்ஸ் வேலைகளுக்காக மும்பை லோகன்ந்த்வாலா காம்ப்ளக்ஸில் உள்ள எனது அபார்ட்மெண்டுக்கு கடந்த டிசம்பரில் குடி பெயர்ந்தேன். எனது பிறந்த வீடு கோலிவுட்தானே! அதை எப்படி விடுவேன். நல்ல கேரக்டர்கள் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன்.

இதையே மலையாள படவுலக பத்திரிக்கை அஸினிடம் பேட்டி எடுத்திருந்தால் (ஒரு கற்பனை, பேட்டியின் தமிழாக்கம்):

நீங்கள் நடித்த மலையாள படங்கள் படுத்தோல்வி பெற்றதால்தான் மலையாள படவுலகிற்கு குட்பை சொல்லி விட்டீர்களா?

அதெப்படி முடிவு செய்தீர்கள். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா-வில் கிடைத்ததைப் போன்று நல்ல ரோல்கள் கிடைத்தால் கண்டிப்பாக மலையாளப் படத்தில் நடிப்பேன். என் சொந்த வீடு கேரளம் தானே. அதை எப்படி விடுவேன்.

என் கல்லூரிக்கால கலாட்டாக்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன்.

எனது நண்பனிற்கு லேப் வைவா-வில் கேட்கப்பட்ட கேள்வி: ‌”What is a protocol?“. அதற்கு அவன் சொன்ன பதில் “Its our college function“. என் நண்பன் படித்த கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் கணினித் துறை சார்பாக நடத்தப்படும் விழா பெயர்தான் “Protocol”. அதைத்தான் அப்பெருந்தகை பதிலாக கூறியுள்ளார்.

மேனேஜ்மென்ட் பற்றி எங்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தப்போது வழக்கம்போல அதை கவனிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த அவ்வாசிரியை பாடம் நடத்துவதை நிறுத்தி என்னை எழுப்பி “Who is the decision maker?” என்று அப்போது நடத்திக்கொண்டிருந்த பாடத்திலிருந்து கேள்விக்கேட்டார். நான் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் சுற்றிமுற்றிப்பார்த்து பின்னர் அவரிடமே “I am not the decision maker” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.

அதே ஆசிரியை ஒரு நாள் நான் மறுபடி வகுப்பில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை கவனித்து (அப்போது நான் சபரி மலைக்கு மாலைப் போட்டிருந்தேன்) என்னருகில் வந்து “நீ மாலை போட்டிருப்பதே வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என்ன கோபமோ தெரியவில்லை 🙂

4வது அல்லது 5வது செமஸ்டரா என்று சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு கணித சம்பந்தப்பட்ட பாடமொன்றை எடுக்க ஒரு ஆசிரியர் வந்தார். அவர் கொஞ்சம் முசுடு. யாராவது அவரிடம் மாட்டினால் சரியாக ஓட்டிவிடுவார். இவரால் எனது நண்பர்கள் சிலர் பலதடவை நன்றாக ஓட்டப்பட்டு அவமானப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவன் அவரைப் பழிக்கு பழி வாங்கப்போவதாக சொல்லி ஒரு நாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவரைக் கேட்காமல் வகுப்பறைக்குள் நுழைந்தான் (ஆசிரியரை அவமானப்படுத்தி விட்டானாம்). அவர் அவனை நிறுத்தி “என்ன, தொறந்த வீட்டுல ஏதோ புகுந்த மாதிரி, நீப் பாட்டுக்கு உள்ள வரே” என்று கேவலமாக கேட்டு அவனை பயங்கரமாக அவமானப்படுத்தி விட்டார். பாவம் அவன். அவனை நாங்கள் இதைவைத்து இன்னுமும் ஓட்டி வருகிறோம். (அதாவது 8-9 வருடங்களாக)

இன்னொரு நண்பன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் கல்லூரிக்கு வரவில்லை. எனவே எங்கள் பேராசிரியை அவனை ஏன் நேற்று நீ வரவில்லை என்றுக் கேட்டார். அதற்கு அவன் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் “மேம். நேத்து காலேஜிற்கு வர வழியில ஆக்ஸ்டெண்ட் ஆயிடிச்சி” என்றான். அப்பேராசிரியைக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “ஏம்ப்பா உண்மையை சொல்லு, தேவையில்லாமல் பொய் சொல்லாதே அப்புறம் நிஜமாக அப்படி ஆயிடப்போகுது” என்றார். இவனோ “இல்லை மேம், நிஜமாத்தான்” என்று சொல்லிவிட்டான். இது நடந்து சில நாட்களுக்கு பிறகு நிஜமாகவே அவனிற்கு அவன் என்னப்பொய் சொன்னானோ அதே மாதிரி அதே இடத்தில் விபத்து நடந்துவிட்டது. பிறகு அவன் எங்களிடம் பட்டப்பாட்டை சொல்லவா வேண்டும்?


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

  • 19,891 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஓகஸ்ட் 2008
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters