மோகனின் எண்ணங்கள்

Archive for மே 2008

ஒரு அதிர்ஷ்டக்கல் நகைக்கடை விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. ஒரு தெருவில் கீழே பணக்கட்டு ஒன்று விழுந்திருக்கிறது. அவ்வழியே போகின்ற எவரும் அதை பார்க்க வில்லை (அல்லது எடுக்கவில்லை). ஆனால்  அதிர்ஷ்டக்கல் வைத்த மோதிரம் போட்ட ஒருவருக்கு மட்டும் அந்த பணம் இருப்பது தெரிந்து அதை எடுத்துக்கொள்கிறார். இதுவா அதிர்ஷ்டம்? பணக்கட்டை கீழே போட்டவர் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்?

என்னை பொருத்த வரையில் இந்த அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களே ஒரு கொடுமை. இவற்றை தடை செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவது இன்னும் கொடுமை.

என்ன கொடுமை சார் இது?

Advertisements

பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என்று குறிப்பிடுவது/கூப்பிடுவது வழக்கம்.  இது பொதுவாக தமிழகத்தை சாராதவர்களுக்கு பிடிக்காது என்று மட்டுமே அவர்கள் (தமிழகத்தை சாராதவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்த வரை  தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் கூட மதராசி என்று விளிப்பது பிடிக்காது. நம்மை பொருத்த வரையில் மதராசி என்பது நக்கலாக சொல்வதற்கும் கேலி செய்வதற்கும் வடக்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை. ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து பொதுவாக யாரும் “மதராசி” என்று உபயோகிப்பதில்லை.

அது போலவே சில ஊடகங்களில் தென்னிந்தியா என்றால் அது தமிழகம் என்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அது மற்ற தென் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவை இல்லாத ஒரு உணர்வை உருவாக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் (இது நான் படித்துத் தெரிந்துக் கொண்டது) ஒரு செய்தி தொலைக்காட்சியில் ராமர் பாலத்தை பற்றிய ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் ராமருக்கு கோவில்கள் கிடையாது, தமிழக மக்கள் ராமரை அதிகமாக வழிப்படுவது இல்லை என்று சொன்னாராம் (அப்படியா?). அதனை கேட்டு அந்த நிகழ்ச்சியை வழி நடத்தி வந்தவர் அதை இப்படி சொன்னார், “தென்னிந்தியாவில் ராமர் வழிபாடு கிடையாது”. இந்நிகழ்ச்சியைப் பார்த்த எனது அலுவலக நண்பர் (அவர் தமிழகத்தை சார்ந்தவரல்ல) தமிழத்தில் ராமர் வழிபாடு இல்லையென்றால் அதை என் பொதுவாக தென்னிந்தியா என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று அவருடைய வலைப்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார். எனக்கு அவருடைய கேள்வி நியாயமான ஒன்று என்று தான் படுகிறது.

இது இப்படியென்றால்,  இன்னொரு புறம் நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று மற்ற மாநிலத்தவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் உடனே கேட்கும் கேள்வி “நீ சென்னையை சேர்ந்தவனா?”. இதுவும் ஒரு வகையில் சங்கடத்திற்கு உள்ளாக்கும் கேள்வி. தமிழகத்தை சேர்ந்தவன் என்றால் பொதுவாக ஏன் எல்லோரும் சென்னையை சேர்ந்தவன் என்று நினைக்க வேண்டும், நான் அதற்கு “நான் சேலத்தை சேர்ந்தவன், சென்னையை சேர்ந்தவன் அல்ல” என்று பதில் கூறுவேன்.

நான் எனது அலுவலக மடிக்கணினியில் லினக்ஸ் உபயோகப்படுத்துகிறேன் (எனது வேலையும் லினக்ஸில் தான்). கடந்த ஆறு மாதங்களாக பெடோரா (Fedora) 8 உபயோகித்து வந்தேன்.

இப்பொழுது பெடோரா (Fedora) 9 கிற்கு மாறி விட்டேன். நான் KDE 4 உபயோகப்படுத்துகிறேன்.

உங்களில் யாராவது லினக்ஸிற்கு மாற வேண்டுமென்று விருப்பமிருந்தால், என்னை கேளுங்கள். நான் உதவி செய்வதற்கு காத்திருக்கிறேன்.

லினக்ஸிற்கு புதியவர்கள் என்றால் நான் உபுண்டு (ubuntu) வை சிபாரிசு செய்கிறேன். உபுண்டு நிறுவுவது (install) மற்றும் configure செய்வது மிக எளிது. நீங்கள் முன்னரே லினக்ஸ் உபயோகப்படுத்தி இருந்தால் நீங்கள் பெடோரா வை முயற்சிக்கலாம்.

லினக்ஸ் உபயோகப்படுத்துவதின் பயன்கள் சில

  • வைரஸ் தொந்தரவு இல்லை.
  • இலவசம்
  • நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு  தகுந்த மாதிரி configure செய்து கொள்ளலாம்
  • எல்லா விதமான application களும் உள்ளன

இப்பொழுதெல்லாம் நான் அலுவலகத்திலும் வீட்டிலும் லினக்ஸ் மட்டும் தான் உபயோகப்படுத்துகிறேன்.

எல்லா லினக்ஸ் விநியோகஸ்தர்களும் (distributions) Live CD என்ற CD யை தருகிறார்கள். நீங்கள் இதை போட்டு உங்கள் கணினியில் லினக்ஸை நிறுவாமல் லினக்ஸ் எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்கலாம். இதனால் உங்களுடைய கணினிக்கு ஒன்றும் ஆகாது. உங்களுக்கு லினக்ஸ் பிடித்து இருந்தால் அதை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவலாம். பிடிக்க வில்லையென்றால் விட்டு விடலாம்.

முயற்சி செய்து தான் பாருங்களேன்.

பின்குறிப்பு
மோசமான தமிழாக்கத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

குறிச்சொற்கள்: , , ,

கர்நாடகாவில் தேர்தல் நடந்துக் கொண்டிருப்பதால், என்னுடைய கடந்த கால தேர்தல் அனுபவங்களை நினைவு கூர்கிறேன்.

நான் இதுவரைக்கும் மூன்று தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன். முதல் தேர்தல் கோவையில் நான் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தப்போது நடந்தது. அப்போது தேர்லுக்காக விடுமுறை விட்டார்கள். நானும் சேலம் வந்து என் வாக்கை பதிவு செய்தேன்.

பிறகு நான் சென்னையில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது இன்னொரு தேர்தல். அதற்கு நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.

அதுப்போல பெங்களூருவில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது அடுத்த தேர்தல். அதற்கும் நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.

தேர்தலுக்காக விடுப்பு எடுப்பதை பார்த்து என்னுடைய நண்பன் ஆச்சரியமாக கேட்டான், “என்னடா, தேர்தலுக்கா விடுப்பு எடுத்துக் கொண்டு போகிறாய்” என்று. ஆனால் தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை என்பதை ஏன் இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை?

நம் மக்களுக்கு தேர்தல் என்றால் அது இன்னொரு விடுமுறை நாள் அல்லது அவர்கள் சொந்த வேலையை செய்ய ஒரு நாள். ஓட்டு போடாதவர்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறை சொல்வதை பார்த்திருக்கிறேன். கடமையை செய்யாத இவர்களுக்கு குறை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?

சன் மியுசிக் சேனலில் சமீப காலமாக “Sun Music Original, Not copy” என்ற விளம்பரத்தை அடிக்கடி காண முடிகிறது. இது புதிதாக ஆரம்பித்த இன்னொரு இசை தொலைக்காட்சியை கிண்டல் செய்வதற்கா என்பது எனக்கு தெரிய வில்லை.

ஆனால் சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?

குறிச்சொற்கள்: ,

KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS‌ தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS‌ தியேட்டரில் பார்த்தோம்.

பின் VPS‌ தியேட்டரை வேறு ஒரு குழுமம் வாங்கி “KS தியேட்டர்” என்று பெயரிட்டார்கள். அதில் முதன்முதலில் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தை திரையிட்டார்கள். அதற்கு அப்படத்தில் நடித்த கலைஞர்கள் வந்து இருந்தனர் (விஜயகாந்த் உட்பட). KS தியேட்டரில் புதுப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு அதில் ஆங்கில படங்கள் மட்டும் திரையிட ஆரம்பித்தார்கள். திரையரங்கை நன்றாக பராமரிப்பார்கள். இப்பொழுது எப்படி இருக்கிறதென்று தெரிய வில்லை.

KS தியேட்டர் எங்கள் வீட்டிற்கு பக்கம் வேறு இருந்தது. பாலிடெக்னிக் நண்பர்கள் கூட்டத்தோடு வார இறுதி நாட்களில் KS தியேட்டருக்கு சென்று விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் சில: Rumble in the bronx,Eraser, Species. சில சமயங்களில் அதில் ஹிந்தி படங்களும் திரையிட்டார்கள். அப்படி நான் பார்த்த படம் “ராஜா ஹிந்துஸ்தானி”, பார்த்த பின்பு தான் அது ரொம்ப வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் ஹிந்தி பதிப்பு என்று.

பின்பு நான் 1997ல் கோவைக்கு பொறியியல் படிப்பிற்காக சென்று விட்டேன். ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சேலம் வந்து விடுவேன். KS‌ தியேட்டரில் அப்பொழுது பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றுவார்கள். ஆகவே நானும் எனது நண்பன் சீனிவாசனும் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் பார்த்து விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் நினைவுக்கு வருபவை சில “‌Ransom, Jurassic Park 2”.

படித்து முடித்து சென்னையில் வேலை கிடைத்து சென்னை சென்ற பின், சேலத்துக்கு மாதம் ஒரு முறை தான் வர முடிந்தது. தவிர சீனிவாசனுக்கு மைசூரில் வேலை கிடைத்து அவனும் மைசூர் சென்று விட்டான். அவன் சேலம் வருவது 2-3 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதனால் படம் பார்க்கும் வழக்கமும் குறைந்தது.

காலம் மாறி விட்டது. ஆர்குட்டில் நான் “ARRS Multiplex” க்கு குழுமங்களை பார்த்து இருக்கிறேன். என்னை(ங்களை) போன்று KS திரையரங்கிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களா இன்னும்?

கணினி விசைப்பலகையில் இருக்கும் கிருமிகள், கழிவறை சீட்டிலுள்ள கிருமிகளை விட அதிகமாகவும் அபாயகரமானதாகவும் இருப்பத்தாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இனிமேல் வாந்தி பேதி பிரச்சினை வந்தால், அதற்கு உணவு மட்டும் காரணம் இல்லை, உங்கள் கணினி விசைப்பலகையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நீங்கள் கணினி பக்கம் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுபவராக இருந்தால், அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்களேன்.

உங்கள் கணினி விசைப்பலகையை அவ்வப்பொழுது துணியை வைத்து மிருதுவாக துடையுங்கள்.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று சொல்வது போல, எந்த கணினி பாகத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்குமோ?

மேலும் விவரங்களுக்கு: http://news.bbc.co.uk/2/hi/uk_news/7377002.stm


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

மே 2008
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements