மோகனின் எண்ணங்கள்

Archive for செப்ரெம்பர் 2008

எனக்கு தெரிந்த நபர் ஒருவர் இவ்வருடம் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர போகிறார். அந்த சுயநிதி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக மடிக்கணினி(laptop) வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அய்யா, மாணவர்கள் வீட்டில் சாதாரண கணினி(desktop computer) வாங்கி உபயோகிக்கலாம் மற்றும் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள கணினியையும் உபயோகப் படுத்தலாம். அப்புறம் எதற்கு மாணவர்களுக்கு மடிக்கணினி? மாணவர்கள் என்ன பிரயாணத்தின் போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணமா இவர்களுக்கு? சாதாரண கணினியுடன் ஒப்பிட்டால் மடிக்கணினி விலை மிக அதிகம், அதனுடைய செயல்திறனும்(performance)  குறைவு. வசதி உள்ளவர்கள் மடிக்கணினி வாங்கி படிக்கலாம். அதற்காக தங்கள் கல்லூரியில் சேரும் அனைவரும் மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்விதத்தில் நியாயம்? இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மடிக்கணினியை அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே கூட மடிக்கணினியை வாங்கிக்கொள்ளலாம்.

என்னமோ போங்க, நான் படித்த காலத்திலெல்லாம் என்று தான் பேசத் தோன்றுகிறது. 🙂

காமெடி நடிகர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் குமுதம் ரிப்போர்டர்க்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு பகுதி:

`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?’

`கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்’ என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.’

கவனியுங்கள். எப்படி இருக்கு இந்த டீலிங்? அ.தி.மு.க.வில் சேரும்போது அவர் என்ன கேட்டுள்ளார் என்று. நல்ல வேளை, மணல் கயிறு படம் போன்று நிபந்தனைகள் போடவில்லை. அப்படி நிபந்தனை போட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பது வேறு விடயம்.

அதே பேட்டியில் அவர் சொல்லி இருப்பதை கவனியுங்கள்:

சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.

`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?’

`அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில்  சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை  பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.’

அட ஆண்டவா. சங்கராச்சாரியார் அவரை இப்பொழுது வேறு கட்சியில் சேர சொல்ல மாட்டார் என்றும்  எஸ்.வி. சேகருக்கு வேறு காரணங்கள் கிடைக்காது என்றும் நம்புவோம்.

அப்பேட்டியிலிருந்து மேலும் சில பகுதிகள் உங்களுக்காக:

எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை

`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள்.  ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்…..?’

`நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்’ என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன’

பின்குறிப்பு:
தலைப்புக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்லன்.

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்காக அலுவலகத்தில் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறை நாளென்பதால் மதிய உணவிற்காக வெளியே செல்ல நேரிட்டது. அப்படி செல்லும்போது ஒரு விடயத்தை கவனித்தேன். நமக்கு தான் விடுமுறையேத் தவிர பெரும்பாலனவ  ர்களுக்கு அந்நாள் வேலை நாளே. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அவர்களுக்கு இம்மாதிரி விடுமுறை நாட்களில் தானே வியாபாரம் நிறைய செய்ய முடியும்.

இதே மாதிரி மே 1 (உழைப்பாளர் தினம்) அன்று கூட இம்மாதிரி ஆட்களுக்கு விடுமுறை கிடையாது. நிறைய தடவை நான் யோசிப்பது என்னவென்றால் உழைப்பாளர் தினம் அன்று இம்மாதிரி உழைப்பவர்களுக்குத் தானே விடுமுறை அளிக்க வேண்டும். நமக்கு எதற்கு என்று (என்னை மாதிரி கணினி சம்பந்தப் பட்ட வேலை செய்பவர்களை சொல்கிறேன், இது என்னுடைய கருத்து).

தீபாவளி, பொங்கல் மற்றும் இன்ன பிற விழா நாட்களில் தங்களது குடும்பத்துடன் அந்நாளை செலவழிக்காமல் தங்கள் வேலை நிமித்தமாக உழைப்பவர்கள் எத்தனை பேர். அவர்களது குழந்தைகள் அப்பா(அல்லது அம்மாவை) பார்க்காமல் எப்படி ஏங்கி போவர்? ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் நிலைமையோ இதற்கும் மேல். தங்கள் சொந்த ஊருக்கு வந்து தங்கள் குடும்பத்தை பார்க்கும் தினம்தான் அவர்களுக்கு திருவிழா.

அதுவும் இம்மாதிரி விழா நாட்களில் ஒயின் ஷாப்பில் வேலை செய்யும் நபர்களின் நிலைமை சொல்ல வேண்டுமா? அங்கு வரும் குடி மகன்களின் இம்சை வேறு தாங்க முடியாது. விழா காலம் என்றாலே என்னை போன்று வெளியூரில் தங்கி இருப்பவர்கள் பேருந்து பயணத்தை தான் நம்பி இருக்கிறோம். விழா காலங்களில் பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதே இல்லை. அப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் படும் பாடு இருக்கே. விழா நாட்களிலும் அவர்கள் அவர்களது கடமையை செய்தே ஆக வேண்டும். (அவர்கள் அந்நாட்களில் அதிக பணம் பெறலாம், இருந்தாலும்?). இப்பட்டியலில் மருத்துவர்கள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள், இன்னும் பலர் உள்ளனர்.

நம்மை போன்றவர்களுக்காக தங்களுடைய குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை விட்டு விட்டு வேலையை/கடமையை செய்யும் அவர்களுக்கு இவ்விடுகை ஒரு சமர்ப்பணம்.

குறிச்சொற்கள்: ,

சில நாட்களுக்கு முன்பாக சிஎன்பிசி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பொது ஒரு சுவராஸ்யமான நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அந்நிகழ்ச்சியில்  ஆர்மன் என்னும் பெண்மணி தொலைபேசியில் நேயர்களுக்கு நிதி ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார். நேயர்கள் தங்களது நிதி நிலைமை (வருமானம், கடன், முதலீடு, சேமிப்பு) இவற்றை சொல்லி அவரிடம் ஆலோசனை பெற்றனர். உதாரணத்திற்கு ஒருவர் எதாவது பொருளை (எல்.சி.டி டிவி) விருப்பப்படுகிறார் என்றால் அவர் தனது சம்பளம், கடன் இவற்றை எல்லாம் சொல்லி தான் அந்த பொருள் வாங்கலாமா என்று கேட்பார். அதற்கு சூஸி அந்நேயருடைய நிதி நிலைமையை ஆராய்ந்து அவர் அப்பொருளை வாங்கலாமா வேண்டாமா என்று சொல்லுவார் (பாதி நேரம் கண்டபடி அந்நேயரை திட்டி விடுவார், உனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது, இந்நேரத்தில் உனக்கு இந்தப் பொருள் தேவையா என்று).

ஏனிந்த நிகழ்ச்சியை போன்று இன்னும் எந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வில்லை என்பதே என் ஆச்சரியம்.

எனக்கு இந்நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக பட்டதால் யார் இந்த பெண்மணி என்று விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தப் போது கிடைத்தவை இவை.

சூஸி ஆர்மன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிதி ஆலோசகர். இவர் CNBC தொலைக்காட்சியில் “சுஸ் ஆர்மன் ஷோ” என்கின்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவர் எழுதிய ஆறு நூட்கள் நியூயார்க் டைம்ஸ் இதழால் பெஸ்ட் செல்லர்ஸ் என்ற சிறப்பை பெற்று இருக்கின்றன. இந்த ஆறு நூட்களை வைத்து இவர் PBS (Public Broadcasting Services) ஆறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இவருடைய PBS நிகழ்ச்சிகளுக்காக இரண்டு முறை எம்மி அவார்ட் வாங்கி உள்ளார். 2008 ல் டைம்ஸ் இதழால் இவர் மிகுந்த செல்வாக்கு உள்ள நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவர் மேல சில புகார்களும் உள்ளன. போர்ப்ஸ் இதழ் இவர் வழங்கும் ஆலோசனைகள் மிக எளிமையாக உள்ளது மற்றும் இவரது சில சான்றிதழ்களை தவறாக காட்டி உள்ளார் என்றும் கூறி உள்ளது. உதாரணத்திற்கு இவரிடம் இருந்த காலவதியான உரிமத்தையும், அவை இன்னும் செல்லக் கூடியது என்று சொல்லி உள்ளாராம். அதே போன்று இவருடைய கோப்புகளில் இவருக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுடன் 18 வருட அனுபவம் உள்ளது என்று கூறி உள்ளார். ஆனால் இவருக்கு 7 வருடங்கள் அனுபவம் தான் உள்ளது என்றும் கூறுகின்றனர். ஒரு செய்தித் தாள் நிறுவனம் சூஸி ஆர்மன் சம்பந்தப் பட்டவரிடம் இது குறித்து தொடர்பு கொண்ட போது, அப்புத்தகத்தை பதித்த நிறுவனம் அத்தவறான தகவலை தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

பின்குறிப்பு:

என்னால் முடிந்த வரை தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பிழை இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும்.

பதிவு மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும் 🙂

குறிச்சொற்கள்: ,

மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சி எங்கே என்றும் கேட்டு மடல் மேல் மடலாக அனுப்புவதால் கன்னாபின்னா செய்திகள் 2 உங்களுக்காக (அந்த மடல் எங்கே என்று கேட்கக் கூடாது)

ஜனாதிபதி, கவர்னர் சம்பளம் மும்மடங்கு உயர்வு: மத்திய அமைச்சரவை முடிவு
பண வீக்கம் உயர்வினாலா?

கங்குலியை நீக்கியது பின்னடைவு: சொல்கிறார் பாண்டிங்
யாருக்கு ஆஸ்திரேலியாவிற்கா?

நியாய விலைக்கடைகளில் ரூ.50க்கு 10 மளிகை பொருட்கள்:முதல்வர்
நியாயமான எடையில் இருக்குமா பொருட்கள்?

போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது-  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம கூறுகிறார்
இவர் ரொம்ப விவகாரமானவரா  இருப்பார் போல இருக்கே

நகைக்கடை வேனை மறித்து ரூ.3 கோடி கொள்ளை- பனை மரத்தில் ரூ.75 லட்சம்!
இதைத்தான் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்று சொல்வார்களோ?

புத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!
இது தேறாது என்கிறார்கள் பெற்றோர்கள்

முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக ரெயில் களில் கூடுதலாக 2 பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் – ரெயில்வே மந்திரி வேலு
அப்படியே டிக்கெட் வாங்காத பயணிகளுக்கும் இரண்டு பெட்டிகள் இணைக்கலாமே?

தீவிரவாதத்தை இணைந்து ஒழிக்க பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு
அது சரி

ஜெ பொதுக் கூட்டம்-சன் லைவ் ரிலே
அட க(ச)ண்றாவியே!

பொங்கல் முதல் சென்னை மாநகருக்கு கடல் குடிநீர்
இனிப்பான செய்தி!?

மதுரையில் இன்று அரசு கேபிள் துவக்கப்படுகிறது
சன் தொலைக்காட்சியின் புதிய நகைச்சுவை தொலைக்காட்சி சன் டீடிஎச்-ல் மட்டுமே தெரியும்

100 நாளில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் பா.ஜ., உறுதி
இது எப்படிய்யா?

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா, மாயாவதி!
என் பெயர் இல்லாததால் இது கருணாநிதியின் சதி – ஜெயலலிதா

பின்குறிப்பு/டிஸ்கிளெய்மர்:

  • டீக்கடை மற்றும் சந்து பொந்துகளில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்விடுகையை வெளியிட்டிருக்கிறேன் (நீல நிறத்தில் இருப்பவை)
  • இவ்விடுகை சிரிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே. இருப்பினும், இவ்விடுகையினால் யார் மனமாவது புண்பட்டிருந்தால், என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகப்பட்ட பதிவுகள் Large Hadron Collider பற்றி போடப்பட்டுவிட்டதால், இப்பரிசோதனையைப்பற்றி நிலவரம் அறிந்துக் கொள்ள ஒரு தளம் எல்லோருக்கும் உதவியாக இருக்குமென்றே இப்பதிவு.  இத்தளத்திற்கு சென்றுப் பார்த்தால் தற்போதைய நிலவரத்தை தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் RSS வசதியும் தருகிறார்கள்.

குறிச்சொற்கள்:

சில நாட்களுக்கு முன் ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்ட்டரும் ஜெயலலிதாவை பற்றி செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதற்கு ஜெயலலிதா தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர்  வார இதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜூனியர் விகடனின் பதில்:

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்

கிரேட் எஸ்கேப்

//அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். //

அடாடா, அதாவது அப்படி ஒரு செய்தி வெளியிட்டதற்கு இவர்களிடம் ஒரு ஆதாரமும் இல்லை என்று அர்த்தமா? காது வழி செய்தியை தான் இவர்கள் பிரசுரம் செய்தார்களா? அப்பொழுது இந்த மாதிரி வந்த செய்திகளில் எத்தனை சதவிகிதம் இவர்கள் புலானய்வு செய்து தீர விசாரித்து வெளியிட்டனர்? இந்த மாதிரி ஆதாரம் இல்லாத செய்திகளுக்கு யாரேனும் மறுப்பு தெரிவிக்கும் வரை (அல்லது நீதிமன்றத்தை அணுகாதவரைக்கும்) எல்லோரும் அது உண்மை செய்தி என்று நம்பி கொண்டு இருப்பார்களே?

//இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

ஒரு வேளை ஆதாரம் இருந்தால் ஏன் இவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? (இவர்கள் தெரிவித்தால் வருத்தம், அதே ரஜினி என்றால் மன்னிப்பா?). இந்த ஊடகங்களின் போக்குக்கு ஒரு அளவே இல்லையா?

நன்றி:

அருண்
இட்லிவடை

நம்ம ஊரிலிருந்து வராங்க, ஆஸ்திரேலியாலிருந்து வராங்க, சிங்கப்பூரிலிருந்து வராங்க, கொரியாலிருந்து வராங்க(அங்க இருக்கரவங்கலுக்கு தமிழ் படிக்கத்தெரியுமானு கேட்கப்படாது), சவுதி அரேபியாலிருந்து வராங்க, தாய்லாந்திலிருந்து வராங்க, மலேசியாலிருந்து வராங்க, ஆஃப்ரிக்காவிலிருந்து வராங்க, இங்கிலாந்துலருந்து வராங்க, ஃபின்லாண்டிலிருந்து வராங்க, கனடாலிருந்து வராங்க, அமெரிக்காலிருந்து வராங்க. (இதெல்லாம் IP address வச்சிதான்)

ஆனா இது வரை பின்னூட்டம் போட்டது நம்ம ஊருலருந்து, சிங்கப்பூரிலருந்து, நைஜீரியாலருந்து, அமெரிக்காலருந்து மட்டும்தான். ஏன் இப்படி? (ஹிஹி, வோர்ட்பிரஸில புதுசா ஸ்டிக்கி போஸ்ட்னு அறிமுகப்படுத்தியிருக்காங்க, அதையும் பரிசோதிச்ச மாதிரி, நம்ம மனசுல இருக்கறதயும் சொன்ன மாதிரி ஆச்சி)

பின்குறிப்பு: இரண்டு நாட்கள் இதை ஸ்டிக்கி போஸ்டாக வைத்து பரிசோதனை செய்தாகி விட்டது. எனவே இதை சாதா போஸ்ட் ஆக்கி விடுகிறேன்.

குறிச்சொற்கள்:

இன்று காலை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியை காண நேரிட்டது. அதில் நாட்டிற்கு தேவையான மிக முக்கிய செய்திகளை ஒளிபரப்பினர். என்னத் தெரியுமா? சல்மான்கானும், ராக்கியும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் அங்கு நடனம் ஆடினர்.

அது மட்டுமா, நாட்டுக்கு தேவையான இன்னொரு முக்கிய அலசல். பாலிவுட் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார், என்று பிரித்து மேய்ந்தனர். சத்யா(ஹிந்தி) படத்தில் விநாயகர் கிளைமேக்ஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு எந்தந்த நடிகர்கள் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று ஒரு அரிய தகவல் கொடுத்தார்கள். முத்தாய்ப்பாக முடிக்கும் பொழுது, பாலிவுட்டின் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் விநாயகர் என்று சொல்லி முடித்தனர்.

சேனல் ஒன்று ஆரம்பித்துவிட்டு இவர்கள் என்னென்ன விடயங்களைத்தான் ஒளிபரப்புவார்களோ! அது அந்த விநாயகனுக்குத்தான் வெளிச்சம்.

விநாயகா இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுப்பா!

விஜய் தொலைக்காட்சி அதனுடைய ஜோ(கே)டி நம்பர் 1க்கு நிறைய பார்வையாளர்களை ஆயத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது. முன்னர் சிம்பு-ப்ரித்விராஜ் சண்டையை (அது உண்மையிலேயே சண்டைதானா?) வைத்து கொஞ்சம் பரபரப்பு உண்டாக்கியது. அச்சண்டையை பார்த்த தொலைக்காட்சி நேயர்களுக்கும் (விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தான்) இது ஒரு விளம்பரமே என்று தெரியும்.(நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை பார்ப்பதில்லை)

அடுத்த தேவையே இல்லாத பரபரப்பு விஷயம், விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு உண்டாக்கி கொண்டுள்ளது. மகேந்திரனை வைத்து இப்போது பரபரப்பு உருவாக்கிக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சி சில நிகழ்ச்சிகள் மூலம் நல்ல பெயர் எடுத்திருந்தாலும் இம்மாதிரி கேவலமாக விளம்பரம் செய்து அப்பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்.

இதே போல் தான் கனா காணும் காலங்கள் (சீசன் 2?) அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விஜய் தொலைக்காட்சி ஊர் ஊராகச் சென்று நேர்முக தேர்வுகள் வைத்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதில் நான் பார்த்த ஒரு விடயம்: தேர்வு குழுவினரால் நீக்கப்பட்ட பெண் ஒருவர் மேடையில் அழுவார் “சார் நான் நல்ல தான் பண்ணேன். என்னை என் ரிஜெக்ட் பண்ணிங்க”. அதற்கு அப்புறம் அப்பெண்ணை அதே தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இதே மாதிரி இன்னொரு கேள்விக்குரிய விடயம் ஒரு சிறுவனை  தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதற்குப்பின் அச்சிறுவனின் பெற்றோர் அவனை அந்த தேர்விலிருந்து விலக சொல்லி விட்டனர். என்ன நடந்ததோ? விஜய் தொலைக்காட்சிக்கே தெரியும்.

விஜய் தொலைக்காட்சி தனது மட்டமான விளம்பர உத்தி மூலம் பெற்றிருக்கும் பெயரை இழந்து விடுமோ?


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

  • 19,891 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

செப்ரெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters