மோகனின் எண்ணங்கள்

Posts Tagged ‘சேலம்

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …

ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்

பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?

ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.

நமது அண்டை நாடுகளில்  இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்

அப்படியா!

தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது புற வழியா?

யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று. சில்பா ஷெட்டி

நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.

நான் கொடுத்தது லஞ்சம் அல்ல – ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு வாழ்த்து கேட்டபோது, தான் பிறந்த நாள் பரிசு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒன்னும் சொல்லறதுக்கில்லை

சத்யம் நிறுவனத்தில் நடந்த கோல்மால்களை வைத்து ராம் கோபால் வர்மா ஒரு படம் எடுப்பதற்காக சத்யம் நிறுவன நிதி ஆவணங்களை ஆராய்ந்துள்ளார் என்று நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி

திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்

பணம் பலம் வென்று விட்டது: ஜெயலலிதா

இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்

அதிமுகவின் வெற்றி ஓர் மாயை: கருணாநிதி

பண பலத்தையும் மீறி மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டதற்கு அதிமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைதான் காரணம் – ஜெயலலிதா

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

Advertisements

நவம்பர் 1 (இன்று தான்) சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது.

சேலம் நகராட்சி 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்படவுள்ளது.

அப்போதைய சேலம் நகராட்சி அவைத்தலைவராக(chairman) இருந்தவர் அர்புத்னாட் (Arbuthnott), 1917 ல் ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார். சேலம் ஜூன் 1 1994 ல் மாநகராட்சியாக ஆனது. டாக்டர் சூடாமணி அப்போதைய மேயராக இருந்தார். இப்போது ரேகா பிரியதர்ஷிணி மேயராக உள்ளார்‌(இவர்தான் சேலத்தின் முதல் பெண் மேயர், தமிழகத்திலியே இவர்தான் முதலா? தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

சேலம் வரலாறு
இப்பதிவின் மூலம், நன்றி தருங்

சேலம் பற்றிய அதிக தகவல்களை நேரம் கிடைக்கும்போது தொகுத்தளிக்கிறேன்.

சேலம் பற்றிய தகவல்களை அன்றாடம் அறிய

சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது

என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.

பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என்று குறிப்பிடுவது/கூப்பிடுவது வழக்கம்.  இது பொதுவாக தமிழகத்தை சாராதவர்களுக்கு பிடிக்காது என்று மட்டுமே அவர்கள் (தமிழகத்தை சாராதவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்த வரை  தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் கூட மதராசி என்று விளிப்பது பிடிக்காது. நம்மை பொருத்த வரையில் மதராசி என்பது நக்கலாக சொல்வதற்கும் கேலி செய்வதற்கும் வடக்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை. ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து பொதுவாக யாரும் “மதராசி” என்று உபயோகிப்பதில்லை.

அது போலவே சில ஊடகங்களில் தென்னிந்தியா என்றால் அது தமிழகம் என்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அது மற்ற தென் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவை இல்லாத ஒரு உணர்வை உருவாக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் (இது நான் படித்துத் தெரிந்துக் கொண்டது) ஒரு செய்தி தொலைக்காட்சியில் ராமர் பாலத்தை பற்றிய ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் ராமருக்கு கோவில்கள் கிடையாது, தமிழக மக்கள் ராமரை அதிகமாக வழிப்படுவது இல்லை என்று சொன்னாராம் (அப்படியா?). அதனை கேட்டு அந்த நிகழ்ச்சியை வழி நடத்தி வந்தவர் அதை இப்படி சொன்னார், “தென்னிந்தியாவில் ராமர் வழிபாடு கிடையாது”. இந்நிகழ்ச்சியைப் பார்த்த எனது அலுவலக நண்பர் (அவர் தமிழகத்தை சார்ந்தவரல்ல) தமிழத்தில் ராமர் வழிபாடு இல்லையென்றால் அதை என் பொதுவாக தென்னிந்தியா என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று அவருடைய வலைப்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார். எனக்கு அவருடைய கேள்வி நியாயமான ஒன்று என்று தான் படுகிறது.

இது இப்படியென்றால்,  இன்னொரு புறம் நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று மற்ற மாநிலத்தவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் உடனே கேட்கும் கேள்வி “நீ சென்னையை சேர்ந்தவனா?”. இதுவும் ஒரு வகையில் சங்கடத்திற்கு உள்ளாக்கும் கேள்வி. தமிழகத்தை சேர்ந்தவன் என்றால் பொதுவாக ஏன் எல்லோரும் சென்னையை சேர்ந்தவன் என்று நினைக்க வேண்டும், நான் அதற்கு “நான் சேலத்தை சேர்ந்தவன், சென்னையை சேர்ந்தவன் அல்ல” என்று பதில் கூறுவேன்.

KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS‌ தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS‌ தியேட்டரில் பார்த்தோம்.

பின் VPS‌ தியேட்டரை வேறு ஒரு குழுமம் வாங்கி “KS தியேட்டர்” என்று பெயரிட்டார்கள். அதில் முதன்முதலில் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தை திரையிட்டார்கள். அதற்கு அப்படத்தில் நடித்த கலைஞர்கள் வந்து இருந்தனர் (விஜயகாந்த் உட்பட). KS தியேட்டரில் புதுப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு அதில் ஆங்கில படங்கள் மட்டும் திரையிட ஆரம்பித்தார்கள். திரையரங்கை நன்றாக பராமரிப்பார்கள். இப்பொழுது எப்படி இருக்கிறதென்று தெரிய வில்லை.

KS தியேட்டர் எங்கள் வீட்டிற்கு பக்கம் வேறு இருந்தது. பாலிடெக்னிக் நண்பர்கள் கூட்டத்தோடு வார இறுதி நாட்களில் KS தியேட்டருக்கு சென்று விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் சில: Rumble in the bronx,Eraser, Species. சில சமயங்களில் அதில் ஹிந்தி படங்களும் திரையிட்டார்கள். அப்படி நான் பார்த்த படம் “ராஜா ஹிந்துஸ்தானி”, பார்த்த பின்பு தான் அது ரொம்ப வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் ஹிந்தி பதிப்பு என்று.

பின்பு நான் 1997ல் கோவைக்கு பொறியியல் படிப்பிற்காக சென்று விட்டேன். ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சேலம் வந்து விடுவேன். KS‌ தியேட்டரில் அப்பொழுது பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றுவார்கள். ஆகவே நானும் எனது நண்பன் சீனிவாசனும் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் பார்த்து விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் நினைவுக்கு வருபவை சில “‌Ransom, Jurassic Park 2”.

படித்து முடித்து சென்னையில் வேலை கிடைத்து சென்னை சென்ற பின், சேலத்துக்கு மாதம் ஒரு முறை தான் வர முடிந்தது. தவிர சீனிவாசனுக்கு மைசூரில் வேலை கிடைத்து அவனும் மைசூர் சென்று விட்டான். அவன் சேலம் வருவது 2-3 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதனால் படம் பார்க்கும் வழக்கமும் குறைந்தது.

காலம் மாறி விட்டது. ஆர்குட்டில் நான் “ARRS Multiplex” க்கு குழுமங்களை பார்த்து இருக்கிறேன். என்னை(ங்களை) போன்று KS திரையரங்கிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களா இன்னும்?


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,288 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

திசெம்பர் 2017
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters