மோகனின் எண்ணங்கள்

Archive for the ‘நையாண்டி’ Category

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …

ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்

பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?

ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.

நமது அண்டை நாடுகளில்  இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்

அப்படியா!

தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது புற வழியா?

யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று. சில்பா ஷெட்டி

நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.

நான் கொடுத்தது லஞ்சம் அல்ல – ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு வாழ்த்து கேட்டபோது, தான் பிறந்த நாள் பரிசு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒன்னும் சொல்லறதுக்கில்லை

சத்யம் நிறுவனத்தில் நடந்த கோல்மால்களை வைத்து ராம் கோபால் வர்மா ஒரு படம் எடுப்பதற்காக சத்யம் நிறுவன நிதி ஆவணங்களை ஆராய்ந்துள்ளார் என்று நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி

திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்

பணம் பலம் வென்று விட்டது: ஜெயலலிதா

இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்

அதிமுகவின் வெற்றி ஓர் மாயை: கருணாநிதி

பண பலத்தையும் மீறி மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டதற்கு அதிமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைதான் காரணம் – ஜெயலலிதா

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

Advertisements

செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:

 • புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
 • தீபாவளி பண்டிகைக்கு 100 ருபாய் மதிப்புள்ள பட்டாசு, 100 ருபாய் மதிப்புள்ள இனிப்பு இலவசமாகத் தரலாம்.
 • தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
 • அக்ஷய த்ரிதை நாளன்று 0.0000001 கிராம் தங்கக் காசு இலவசமாகத் தரலாம்.
 • விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • புனித வெள்ளியன்று கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ஆயுத பூஜை நாளன்று பொறி மற்றும் இன்ன பிற பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம்.

மக்களே இது போல இன்னும் என்ன என்ன இலவசமாகத் தரலாம் என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் அரசு ரகசியமாகவே முழுமையாக முடிக்கவும் திட்டம் இட்டுள்ளது. அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக வழங்கப்படும் என்று நம்ப முடியாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே(மதுரை) மேயரோ, துணை மேயரோ உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மதுரை வந்தால் எழுச்சியான வரவேற்புக் கொடுப்பதில்லை. போஸ்டர்கள் ஒட்டுவதில்லை. அப்படியிருக்க, ஸ்டாலின் மதுரை வந்தால் இவர்கள் எப்படி அவர் முன்னால் போய் நிற்கமுடியும்?” என அலுத்துக்கொண்டு முடித்தனர் தி.மு.க. கவுன்சிலர்கள். திமுக தலைவரே போஸ்டர்கள், வரவேற்பு விளம்பரங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க சில கவுன்சிலர்கள் இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? அப்பொழுது இந்த மாதிரியான மரியாதைகள் செய்தால் தான் அவரி(ர்களி)டம்  மக்கள் பிரச்சினையை பேச முடியுமா?  என்னக் கொடுமை சார் இது?

மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் இரு குழுக்களாக இருப்பது அதிகாரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால் அழகிரி அண்ணன் கவனத்துக்கு அதிகாரிகள் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கொண்டு செல்வதில்லை. அதிகாரிகள் நன்றாகச் செயல்படுகிறார்கள் என அண்ணன் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

தீவிரவாதிகளின் தாக்குதலை நேரடி ஒளிபரப்பு மீடியாக்கள் செய்தது சரியா தவறா? சரி என்றால் Y என்றும் தவறு என்றால் N என்றும் 9000000000 என்கின்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்(ஒரு செய்திக்கு 50 ரூபாய் உங்கள் மொபைலில் இருந்து கழிக்கப்படும்)

“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். நீங்க முதலமைச்சரா இருந்தப்போது  உங்கள்  மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அப்போது  ஏன் நீங்களாகவே பதவி விலகி விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வில்லை? அப்படின்னு நான் கேக்கலை,மைனாரிட்டி திமுக அரசை சேர்ந்தவங்க கேக்கறாங்க.

சென்னை, நவ. 25:நக்சல் (மாவோயிஸ்ட்) இயக்கத்திற்கு மதுரையில் உள்ள 2 கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேம்பஸ் இன்டர்வியு?

இலங்கைத் தமிழர் பிரச்சனை : லண்டன் சென்றார் வைகோ! எப்போ இலங்கை போறீங்க?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை இலங்கையில செஞ்சி இருக்கலாமே?

சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி. சிட்டி வங்கியில் கடன் வாங்கி இருக்கும் எனக்கு யாராவது  உதவ முன் வருவீர்களா என்று கேட்கிறார் நம்ம கோவிந்து.

வீட்டுக் காவலில் மசூத் அசார் : பாகிஸ்தான் நடவடிக்கை! ஏன் வீட்டிலேயே உக்காந்து அடுத்த தாக்குதலை திட்டமிடறதுக்கா?

திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதிருப்தி அலை வீசாது, சுனாமி அதிருப்தி அலையே வீசும் அப்படின்னுல பேசிக்குறாங்க.

பந்து வீச அதிக நேரம் எடுத்தால் கடும் நடவடிக்கை; கிரிக்கெட் சங்கம் முடிவு. இப்படி சொல்லிட்டதால பந்தை எறியாதீங்க.

5 மாநில தேர்தல் முடிவு; மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை-பா.ஜனதா கருத்து. இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லுவாங்களா?

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி:-3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது . டெல்லியில் கிடைத்த வெற்றி நாடு முழுவதும் வெற்றி பெற்றதற்கு சமம். ஆமா, யாராலும் தடுக்க முடியாது. நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு(அதாவது ஒண்ணுமே செய்யாம) இருங்க. வேற யாரும் ஒண்ணும் பண்ண வேண்டாம். யானை தன் தலையில தானே மண் அள்ளி போட்டுக்குமாம், அது மாதிரி ஆகிட போகுது.

சேலத்தில் 31 ஏழைகளை அகற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆடியாட்கள் கைப்பற்றியதாக கூறப்படும் நிலம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. லோக்கல் கேபிள் டிவி ஒண்ணு ஆரம்பிச்சமா அதை வச்சி நெறைய பிசினஸ் ஆரம்பிச்சமானு அப்படியே நிறைய டெவலப் பண்ணமானு இருந்திருந்தா பிரச்சனையே இருந்து இருக்காதே?

கருணாநிதி குடும்பம் – மாறன் சகோதரர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்தது. அப்போ சன் டிவி டாப் டென்ல வாரணம் ஆயிரம் வருமா வராதா? தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்குமா இருக்காதா?

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முக்கியமான அவசரம் எதுவும் இல்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். ஏப்ரல் 1 அன்னிக்கி வச்சா ரெம்ப பொருத்தமா இருக்கும்னு பொது மக்கள் சொல்லுறாங்க.

பின்குறிப்பு:

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து இதோ கன்னாபின்னா செய்திகள் 3 உங்களுக்காக.

50

போட்டிச் செய்திகள்

கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம், ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.(இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு)


ஏடாகூடச் செய்திகள்

.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்! (கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உண்மைகளைச் சொன்னதாலா?).

உசிலம்பட்டியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.(நல்ல வேளை அந்த உறவினர்களும் பேருந்து மீது கல் வீசாமால் அமைதியாக மறியல் செய்தார்களே).

இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த, தமிழகத்தில் இருந்து 1500 மாணவர்கள் சிறப்பு ரெயிலில் டெல்லி சென்றனர்.(இதில் ராமதாஸ், கருணாநிதி மற்றும் பல அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரபலங்களின் குழந்தைகள் அல்லது  பேரன், பேத்திகள் இருக்கின்றார்களா?).

புதிய அமைச்சரவையில் எதிர்க்கட்சியினருக்கும் பதவி: ஒபாமா!(எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்).

பொதுக்கூட்டங்களில் மாவட்டங்களைச் சேர்ந்த எந்த ஒரு தனி நபரையும் புகழ்ந்து பேசக்கூடாது என கட்சியினருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய கட்டளை பிறப்பித்துள்ளார்.(என்ன சொல்ல வராங்கன்னு புரியுதா?).
.

சிரிப்புச் செய்திகள்

மாணவர்களை ஜெ., வைகோ தூண்டி விட்டிருக்கலாம்: கருணாநிதி (ஹையோ ஹையோ).

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், விஜயகாந்த் தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் (‘மரியாதை’ படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை -விஜயகாந்த்)


உருப்படியானச் செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கே-15 ரக ஏவுகணையை, முதன் முறையாக தரையில் இருந்து ஏவி இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை நடத்தியது(12/நவம்பர்).

இந்தியா, நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன்-1’ செயற்கைக்கோள், திட்டமிட்டபடி நிலவின் வட்டப்பாதையில் இறங்கியதன் மூலம் இத்திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது

ஆர்ப்பாட்டச் செய்திகள்

 • கரூரில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
 • அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்
 • சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கள்ளக் குறிச்சி, பரமக்குடி ஆகிய இடங்களில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

பின்குறிப்பு 1:
இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.

பின்குறிப்பு 2:
ஏய் டண்டணக்கா டணக்குணக்கா, இத்தோடு 50 பதிவு போட்டாச்சி. மக்கள்  இப்போது போல எப்போதும் தர வேண்டும்.

முந்தைய கன்னாபின்னாச் செய்திகள்

(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர்  தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம்  கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.

இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?

பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.

மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சி எங்கே என்றும் கேட்டு மடல் மேல் மடலாக அனுப்புவதால் கன்னாபின்னா செய்திகள் 2 உங்களுக்காக (அந்த மடல் எங்கே என்று கேட்கக் கூடாது)

ஜனாதிபதி, கவர்னர் சம்பளம் மும்மடங்கு உயர்வு: மத்திய அமைச்சரவை முடிவு
பண வீக்கம் உயர்வினாலா?

கங்குலியை நீக்கியது பின்னடைவு: சொல்கிறார் பாண்டிங்
யாருக்கு ஆஸ்திரேலியாவிற்கா?

நியாய விலைக்கடைகளில் ரூ.50க்கு 10 மளிகை பொருட்கள்:முதல்வர்
நியாயமான எடையில் இருக்குமா பொருட்கள்?

போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது-  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம கூறுகிறார்
இவர் ரொம்ப விவகாரமானவரா  இருப்பார் போல இருக்கே

நகைக்கடை வேனை மறித்து ரூ.3 கோடி கொள்ளை- பனை மரத்தில் ரூ.75 லட்சம்!
இதைத்தான் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்று சொல்வார்களோ?

புத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!
இது தேறாது என்கிறார்கள் பெற்றோர்கள்

முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக ரெயில் களில் கூடுதலாக 2 பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் – ரெயில்வே மந்திரி வேலு
அப்படியே டிக்கெட் வாங்காத பயணிகளுக்கும் இரண்டு பெட்டிகள் இணைக்கலாமே?

தீவிரவாதத்தை இணைந்து ஒழிக்க பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு
அது சரி

ஜெ பொதுக் கூட்டம்-சன் லைவ் ரிலே
அட க(ச)ண்றாவியே!

பொங்கல் முதல் சென்னை மாநகருக்கு கடல் குடிநீர்
இனிப்பான செய்தி!?

மதுரையில் இன்று அரசு கேபிள் துவக்கப்படுகிறது
சன் தொலைக்காட்சியின் புதிய நகைச்சுவை தொலைக்காட்சி சன் டீடிஎச்-ல் மட்டுமே தெரியும்

100 நாளில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் பா.ஜ., உறுதி
இது எப்படிய்யா?

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா, மாயாவதி!
என் பெயர் இல்லாததால் இது கருணாநிதியின் சதி – ஜெயலலிதா

பின்குறிப்பு/டிஸ்கிளெய்மர்:

 • டீக்கடை மற்றும் சந்து பொந்துகளில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்விடுகையை வெளியிட்டிருக்கிறேன் (நீல நிறத்தில் இருப்பவை)
 • இவ்விடுகை சிரிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே. இருப்பினும், இவ்விடுகையினால் யார் மனமாவது புண்பட்டிருந்தால், என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை (3 செப்டம்பர்) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நமது தொ(ல்)லைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது நிகழ்ச்சி மற்றும் புது படங்களை ஒளிப்பரப்புகின்றன.

அந்நிகழ்ச்சிகளில் எனது கற்பனை சிறிது கலந்துக் கொடுக்கின்றேன்.

நேயர்களே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

சன் தொலைக்காட்சியில்
நான் சென்னை பொண்ணுதான் சொல்கிறார் – குஜராத்தைச் சேர்ந்த நமீதா (இதை குங்குமம் ஸ்டைலில் படிக்கவும்)

உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் கடைசி முறையாக “பல்லை உடைப்பேண்டா” சிறப்புத் திரைப்படம் மாலை 6.00 மணிக்கு

கலைஞர் தொலைக்காட்சியில் (இது விநாயகர் சதுர்த்திக்காக அல்ல, விடுமுறை நாள் என்பதால் மட்டுமே)
சிறப்புத் திரைப்படம் – விநாயகர் மகிமை‌(தெலுங்கு மொழிமாற்றப்படம்)

ஜெயா தொலைக்காட்சியில்
சுஹாஸினி விமரிசிக்கும் சூப்பர்ஹிட் போஜ்புரி திரைப்படம்
மாலை 6.00 மணிக்கு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக போஜ்புரி திரைப்படம் (சுஹாஸினி விமரிசித்த அதே போஜ்புரி திரைப்படம் தான்)

விஜய் தொலைக்காட்சியில்
சிறப்பு ஜோடி நம்பர் 1 – இம்முறை போட்டியிலிருந்து விலகுவது(அல்லது விலக்கப்படுவது) யார்? காணத்தவறாதீர்கள்

ராஜ் தொலைக்காட்சியில்
என்ன செய்தாலும் யாருமே பார்ப்பதில்லை என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.

அப்படியே கொஞ்சம் ஜெமினி தொலைக்காட்சியில் எட்டிப்பார்த்தால்
நான் ஹைதராபாத் பொண்ணுதான் சொல்கிறார் – திரிஷா (இதையும் குங்குமம் ஸ்டைலில் படிக்கவும்)

உஷ்ஷ்ஷ்ஷ், கண்ணைக் கட்டுதே.


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

 • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூலை 2018
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements