மோகனின் எண்ணங்கள்

Archive for the ‘தொடர்பதிவு’ Category

சில நாட்களுக்கு முன் நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா என்னுடையப்பதிவிற்கு “Butterfly Award” கொடுத்துள்ளார். இந்த அவார்ட் “Coolest Blog I ever Know (இதை எப்படி தமிழில் சொல்லுவது?)” க்கு தரப்படுவதாம்.

butterfly_award4

இந்த அவார்ட் கொடுத்த நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த அவார்ட் (விருது -என்று சொல்லலாமா?) பெற எனது பதிவிற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்  எழாமல் இல்லை.(இது தான் சாக்குன்னு விருதை திருப்பி கேட்டுடாதீங்க  அணிமா, ஹிஹி). கொடுத்ததை திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்காது மற்றும் அணிமா மனம் புண்படும் என்பதாலும் இந்த விருதை நானே வைத்துக் கொள்கிறேன். இப்பொழுது இந்த விருதுக்கு நானும் சிலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கிரி – மிகுந்த இயல்பாக பதிவுகள் எழுதுபவர்.
அது சரி – அவருடைய வேதாளம்-மாதி கதைகள்
குந்தவை – பெரும்பாலும் அவருடைய குழந்தை கண்மணியின் குறும்புகளை பற்றி எழுதுவார். அவ்வப்பொழுது சொந்த அனுபவங்களையும் சொல்வார். அதில் பள்ளிக்கு கட் அடித்த அனுபவத்தை படித்து பாருங்கள். ஹாஹா.

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

பின்குறிப்பு:
இவ்விருதை ஏன் எனக்கு கொடுக்க வில்லை என்றும் ஏன் எனக்கு கொடுத்தாய் என்றும் யாரும் கோவித்துக் கொள்ள வேண்டாம்.

Advertisements
குறிச்சொற்கள்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் சுபாஷிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இத்தொடர்ப்பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு வேண்டுகோள். இனி யாரேனும் தொடர் பதிவிற்கு கூப்பிடுபவர்கள் முதலில் என்னைக் கூப்பிடுங்கள். அப்போதுதான் இதுவரை என்னை நிறைய தொடர் பதிவுகளுக்கு இழுத்து விட்ட அணிமா, சுபாஷ் போன்றவர்களை நான் இழுக்க முடியும்.ஹிஹி

நான் உபயோகிப்பது லினக்ஸ் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள். ஆனால் நிறைய திறந்த நிரல் (open source) மென்பொருட்கள் விண்டோஸுக்கும் உள்ளன.

நான் உபயோகிக்கும் இயக்குத்தளம்(Operating System) பெடோரா லினக்ஸ், தற்போதைய வெளியீடு எண் 9. நவம்பர் 25 ம தேதி பெடோரா லினக்ஸ் 10 வெளியீடாகப் போகிறது. இதல்லாமல் நான் உபுண்டு லினக்சும் அவ்வபொழுது உபயோகிப்பது உண்டு. உபுண்டு 8.10 அக்டோபர் 30 அன்று வெளியானது.

நான் அதிகமாக உபயோகிக்கும் மென்பொருட்கள்:

லினக்ஸ் என்பதால் நான் நெருப்பு நரி, ஓபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களையே உபயோகிக்கிறேன்.

நெருப்பு நரியில் நான் உபயோகிக்கும் சில எக்ஸ்டென்ஷன்கள்

  • நெருப்பு நரி விடியோ தரவிறக்க உதவியாளர்: இது யூட்யூப் போன்ற தளங்களிலிருந்து விடியோக்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படும்.
  • நீங்கள் அலுவலகத்தில் ப்ராக்சி(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ராக்சி) உபயோகிக்க வேண்டி இருந்தால், வீட்டில் அதை உபயோக்கிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மடிக்கணினி உபயோகிப்பவராக இருந்தால்) பாக்சி ப்ராக்சி உபயோகிக்கலாம். ஒரு சொடுக்கலில் (single click) நீங்கள் உங்களுக்குத் தேவையான ப்ராக்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது ப்ராக்சியை செயல் இழக்கச் செய்யலாம்.
  • தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் ஆட்-ஆன் DownThemAll உபயோகப்படுத்தி பாருங்கள் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
  • இன்னும் பல உபயோகமான ஆட்-ஆன்களுக்கு இத்தளத்தை பாருங்கள். About

கிம்ப் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் மென்பொருள் (அடோபி போட்டொஷாப் போன்று)
கேரைட் – எளிய கேடிஈ தொகுப்பாளர் மென்பொருள்
கேடார்ரன்ட் – படங்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் மென்பொருள்
டிஜிகேம் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் கேடிஈ-யின் மென்பொருள், இதில் உள்ள சிறப்பு புகைப்படங்களை குழுக்களாக பராமரிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் அனைத்துப் புகைப்படங்களிற்கு ஓரக்கோடு/சட்டம்(border/frame) போட விரும்பினால் டிஜிகேம் சிறந்த வழி

அக்ரெகேட்டர் – RSSFeed படிக்க
அமரோக் – பாடல்கள் கேட்க
விஐ(ம) – சக்திவாய்ந்த தொகுப்பாளர். விசுவல்(visual) கமாண்டின் சுருக்கமே விஐ – சக்தி வாய்ந்த
பிட்ஜின் – இதன் வழியாகத்தான் யாஹூமற்றும் ஐ.ஆர்.சி சேட் செய்வேன்.
காண்டாக்ட் – கேடிஈ-யின் PIM (Personal Information Manager) மென்பொருள்.
விஎல்சி – படம் பார்க்க, இதன் மூலமாக நீங்கள் பார்க்கும் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம்.
அடாசிட்டி – ஒலிப் பதிவு செய்யும் மென்பொருள்
கே3பி – சிடி/டிவிடி பதிவு செய்ய உதவும் மென்பொருள்
யம் எக்ஸ்டெண்டர்(யமெக்ஸ்/yumex) – மென்பொருள் நிறுவ
தண்டர்பேர்ட் – ஈமெயில் அனுப்ப/படிக்க

ஏதோ என் புருஷனும் கச்சேரிக்கு போறான் என்று சொல்லும் விதமாக நானும் ஒரு தொடர் பதிவு போட்டு விட்டேன். இப்பொழுது நான் சிலரை இதில் மாட்டி விட வேண்டும்.

1. அடலேறு
2. இங்கிலிஷ்காரன்
3. குந்தவை
4. சர்வேசன்

அழைக்கப்பட்ட அனைவரும் தயவு செய்து பதிவை போட்டு விடுங்கள். இல்லையென்றால் ஆட்டோவெல்லாம் வராது. அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு 5000 ரூபாய் காசோலையை அனுப்பிவிடுங்கள். அவ்வளவுதான்.

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? (அணிமா ஸ்டைல்)

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

அடடா, எவ்வயதில் முதல் சினிமா பார்த்தேன் என்பது எனக்கு நினைவு இல்லையே. அப்பொழுதே வலைப்பதிவு வசதி இருந்திருந்தால் நான் அதை பதிவு செய்திருப்பேன். இப்பொழுது உபயோகமாக இருந்திருக்கும். ஆகையால் வலைப்பதிவு, இணையம் போன்றவற்றை அப்போது கண்டு பிடிக்காததற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

மெய்யாலுமே இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

இ. என்ன உணர்ந்தீர்கள்?

என்னத்த உணர்ந்து இருப்பேன். எப்படா வீட்டுக்கு போகலாம் என்று இருக்குமோ?

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தலைவரின் குசேலன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பொதுவாக நான் தமிழ் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பது வழக்கம். ஆனால் உன்னாலே உன்னாலே திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன். படம் ஒகேவாகத்தான் இருந்தது. ஒளிப்பதிவிற்காகவும் திரைக்கதையில் சிறிது வித்தியாசம் காட்டியதற்கும் ஜீவாவிற்கு ஒரு சல்யூட்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாதித்த படங்கள் நிறைய இருக்கின்றன:
நீ வருவாயென – பார்த்திபன் நடித்த படம் ஆயிற்றே என்று பார்த்து பாதிப்படைந்த படம்
வரலாறு (காட் பாதர்) – நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் செய்யப்பட்ட படத்தை பார்த்து அடைந்த பாதிப்பு இருக்கிறதே
கண்ணுக்குள் நிலவு – பார்த்து கடுப்பு ஆனது ஒரு கதை
மோனிஷா என் மோனலிசா – காரணங்கள் சொல்ல வேண்டுமா? இதற்கு பிறகு T.R. படங்கள் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை.
அடடா, தருமபுரியை விட்டுட்டேனே!

(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்லை

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

தொழில் நுட்பம் முன்னேறியதால் எப்படங்கள், பாடல்கள் எங்கிருந்து சுடப்பட்டவை என்று நமக்கு தெரிய வந்துள்ளது என்னை பாதித்துள்ளது .(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

முன்பு விகடன், குமுதம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதில்லை. இருந்தாலும் வலையுலகிலும் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. எனவே தமிழ் சினிமா பற்றி வாசிக்காமல் இருக்கமுடியாது.

7.தமிழ்ச்சினிமா இசை?

நிச்சயம் பெருமை படலாம்.மலையாளம், தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி பேசுபவர்களும் விரும்பி கேக்கும் அளவுக்கு தமிழ் இசை உள்ளது. பெரும்பாலானவர்களை போல இளையராஜா இசை பிடிக்கும். எ.ஆர்.ரஹ்மான் இசை பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவாக வேறு இந்திய மொழி படங்கள் பார்ப்பதில்லை. எக்கச்சக்கமாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன் (அது புரிகிறதோ இல்லையோ).
ஹாஸ்டல், சா(1,2), பேதாலஜி . அதுவும் ஹாஸ்டல், பேதாலஜி  படங்கள் முழுதாக பார்க்க முடியவே இல்லை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. அதை மீண்டும் செய்வேன். இதை செய்வதால் தமிழ்ச்சினிமா மேம்படும் என்று நினைக்கின்றேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மசாலா மற்றும் நல்ல படங்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படி நடந்தால் பாவம். தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என்ன செய்யும்? நான் ஹாலிவுட் படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்வேன். தமிழர்களுக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும்.

இப்பொழுது நான் சிலரை கோர்த்து விட வேண்டும்.

நண்பர் அடலேறு
சேலத்து சிங்கம் இங்கிலிஷ்காரன் (அப்பாடா பட்டத்தை ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சி)
அன்பர் கல்யாண்
நண்பர் கிரி (கிரி இந்த தடவை சரியாக தொடர் பதிவு போட்டு விடுங்கள்)
மதிப்பிற்குரிய அருண்

குறிச்சொற்கள்:

நண்பர் அணிமா என்னை இத்தொடர் பதிவில் என்னை சேர்த்து(மாட்டி) விட்டார்.

A – axxo-movies
இத்தளத்திலிருந்து தான் நான் அடுத்து என்ன படம்(ஹாலிவுட்) தரவிறக்கம் செய்யவேண்டுமென்று முடிவு செய்வது. பிட் டார்ரண்ட் தரவிறக்கம் செய்ய நம்பகமான தளம்(ஆள்).

C- Cinema Express
இந்த தளத்தில்தான் நாட்டு நடப்பு, முக்கியமான செய்திகளை தெரிந்துக்கொள்வேன்.

D – தினமணி
செய்திகள்

E – Gadget news
சமீபத்திய சாதனங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ள

F- Future bazaar
பொருட்களுக்கு ஏதானும் சலுகை இருந்தால், இதில் ஆர்டர் செய்வேன்.

G – Gmail
யாராவது நம்மை நினைத்து ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி இருக்கிறார்களா என்றுப் பார்க்க

Google Labs
கூகுள் ஆய்வகத்தில் இப்போது என்ன புதிதாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுப்பார்க்க

H – HDFC Bank என்னுடைய வங்கிக் கணக்கில் ஏதாவது பணம் இருக்கிறதா என்றுப் பார்க்க

I – ISO Hunt
இத்தளத்திலிருந்து பிட் டார்ரண்ட் கோப்பு கண்டுபிடித்து, அதனை தரவிறக்கம் செய்து, ஏதாவது ஒரு பிட் டார்ரண்ட் கிளையண்ட் மூலமாக படத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

K – KPN Travels
திருவிழா நேரத்தில் ஊருக்கு போக முன்பதிவு செய்ய நாடும் தளம்.(மத்த நேரத்தில் எல்லாம் நம்ம தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தான்)

Kernel
சமீபத்திய லினக்ஸ் கெர்னல் தரவிறக்கம் செய்ய

L – Linked In
புரொஃபஸனல் நெட்வொர்க், ஆர்குட் போலதான், ஆனா ஒன்லி ஃபார் ஆபிஸர்கள்ஸ்.

M – Mailinator
ஈமெயில் ஐடி கொடுத்தால் மட்டும்தான் வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும் தளங்களிற்கு தற்காலிகமான ஈ-மெயில் ஐடி உருவாக்கிக் கொள்ளலாம்.

N – NDTV
செய்திகள்

O – Open Subtitles
தரவிறக்கம் செய்யப்பட்ட ஆங்கில, வேற்றுமொழி படங்களுக்கு சப்டைட்டில் நீங்கள் தனியாக பதிவிறக்கம் செய்து, படம் பார்க்கும் போது டிவிடி மாதிரி பார்க்கலாம்.

Rajini

என்னைப்போன்ற ரஜினி ரசிகர்களுக்கான வலைப்பதிவு

P – PVR Cinemas
பிவிஆர் திரையரங்குகளில் ஓடும் படங்களிற்கு முன்பதிவு செய்ய.

R – Rajini fans
இன்னொரு ரஜினி ரசிகர்களுக்கான தளம்

Rediff
செய்திகள், வர்த்தகம், சினிமா, விளையாட்டுப்பற்றி தெரிந்துக்கொள்ள

S – Speed Test
பிராட்பேண்ட்(யாரோ இதை அகலப்பட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்) வேகத்தை பரிசோதிக்க

T – Tamilish
தமிழ் பதிவுலகத்தில் என்ன புதுசு என்று தெரிந்துக்கொள்ள மற்றும் நமது படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.

Tamibeat
தமிழ் mp3 பாடலகளை தரவிறக்கம் செய்ய

V – Video Lan
வீ எல் சி – ஓபன் சோர்ஸ் வீடியோ/ஆடீயோ பிளேயர்.

W- WordPress
இங்கேதான் நான் என்னுடைய வலைப்பதிவு வீடு வைத்திருக்கிறேன்.

2Wire
பிராட்பேண்ட் வேகத்தை பரிசோதிக்க

Y – Yahoo Mail
யாஹூலயும் ஒரு இலவச ஈமெயில் அக்கவுண்ட் வச்சிருக்கோம்ல


இத்தொடர் பதிவின் ஆரம்பம்: http://microblog.ravidreams.net/a-for-apple/

Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.

இப்பொழுது நான் மூன்று பேரை இத்தொடர் பதிவிற்கு அழைக்க வேண்டும்.

பின்னூட்டமளித்து ஊக்கம் கொடுத்த மூத்த பதிவரான கிரி
கூடுதுறை சுந்தர்
எனக்கு கூட ஒரு அவார்ட் கொடுத்த குந்தவை அக்கா

மக்களே, ஆரம்பிங்க உங்க தொடர் பதிவை

குறிச்சொற்கள்:

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூலை 2018
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements