மோகனின் எண்ணங்கள்

Archive for the ‘கேள்விகள்’ Category

எங்கள் வீட்டு காம்பௌண்டில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளிலும் சேர்த்து 5 பைக்குகள் உள்ளன. இரவு வீட்டு காம்பௌண்டில் தான் நிறுத்துவோம். யார் வேண்டாலும் உள்ளே வரலாம். கேட் பூட்டினாலும் பிரயோஜனம் இல்லை. காம்பௌண்ட் சுவர் தாண்டி வந்து விடலாம். இப்பொழுது எதற்கு என் வீடு பற்றி கதை சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களாக காம்பௌண்டில் உள்ள அனைத்து பைக்குகளில் இருந்தும் பெட்ரோல் இரவு நேரங்களில் திருடப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் டியுபை கழற்றி பெட்ரோலை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த பெட்ரோல் திருடர்களை எப்படி பிடிப்பது என்றும் தெரிய வில்லை. எல்லாரும் தூங்கிய பின்பு தான் வந்து தங்கள் கைவரிசைகளை காட்டுகின்றனர். இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பைக் எடுக்கும் போது மறுபடி நிரப்பி கொள்ள வேண்டியது. இப்படித்தான் அவர் பெட்ரோல் திருட்டை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

இம்மாதிரியான பெட்ரோல் திருட்டை தடுக்க பெட்ரோல் லாக் எதோ இருக்கிறதாமே, யாரேனும் உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? அது உண்மையிலேயே பெட்ரோல் திருட்டை தடுக்கிறதா, உபயோகித்தவர்கள் சொல்லுங்களேன்.

Advertisements
குறிச்சொற்கள்: ,

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?

எனக்கு தெரிந்த நபர் ஒருவர் இவ்வருடம் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர போகிறார். அந்த சுயநிதி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக மடிக்கணினி(laptop) வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அய்யா, மாணவர்கள் வீட்டில் சாதாரண கணினி(desktop computer) வாங்கி உபயோகிக்கலாம் மற்றும் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள கணினியையும் உபயோகப் படுத்தலாம். அப்புறம் எதற்கு மாணவர்களுக்கு மடிக்கணினி? மாணவர்கள் என்ன பிரயாணத்தின் போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணமா இவர்களுக்கு? சாதாரண கணினியுடன் ஒப்பிட்டால் மடிக்கணினி விலை மிக அதிகம், அதனுடைய செயல்திறனும்(performance)  குறைவு. வசதி உள்ளவர்கள் மடிக்கணினி வாங்கி படிக்கலாம். அதற்காக தங்கள் கல்லூரியில் சேரும் அனைவரும் மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்விதத்தில் நியாயம்? இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மடிக்கணினியை அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே கூட மடிக்கணினியை வாங்கிக்கொள்ளலாம்.

என்னமோ போங்க, நான் படித்த காலத்திலெல்லாம் என்று தான் பேசத் தோன்றுகிறது. 🙂

சில நாட்களுக்கு முன் ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்ட்டரும் ஜெயலலிதாவை பற்றி செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதற்கு ஜெயலலிதா தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர்  வார இதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜூனியர் விகடனின் பதில்:

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்

கிரேட் எஸ்கேப்

//அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். //

அடாடா, அதாவது அப்படி ஒரு செய்தி வெளியிட்டதற்கு இவர்களிடம் ஒரு ஆதாரமும் இல்லை என்று அர்த்தமா? காது வழி செய்தியை தான் இவர்கள் பிரசுரம் செய்தார்களா? அப்பொழுது இந்த மாதிரி வந்த செய்திகளில் எத்தனை சதவிகிதம் இவர்கள் புலானய்வு செய்து தீர விசாரித்து வெளியிட்டனர்? இந்த மாதிரி ஆதாரம் இல்லாத செய்திகளுக்கு யாரேனும் மறுப்பு தெரிவிக்கும் வரை (அல்லது நீதிமன்றத்தை அணுகாதவரைக்கும்) எல்லோரும் அது உண்மை செய்தி என்று நம்பி கொண்டு இருப்பார்களே?

//இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

ஒரு வேளை ஆதாரம் இருந்தால் ஏன் இவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? (இவர்கள் தெரிவித்தால் வருத்தம், அதே ரஜினி என்றால் மன்னிப்பா?). இந்த ஊடகங்களின் போக்குக்கு ஒரு அளவே இல்லையா?

நன்றி:

அருண்
இட்லிவடை

சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பள்ளியைத் தாண்டி செல்ல வேண்டியதிருந்தது. அச்சமயம் பள்ளி விடும் நேரம் ஆதலால் காவலர் வாகனங்களை நிறுத்தி பள்ளி மாணாக்கர்கள் சாலையை கடக்க உதவிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் வாகன ஓட்டிகள் பொறுமை இழக்க ஆரம்பித்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் சற்று தொலைவில் தான் சிக்னல், அதுலேயும் சிவப்பு விளக்கு தான் எரிந்துக் கொண்டிருந்தது. எனவே அங்கே போயும் நிற்க வேண்டியதாய் தான் இருக்கும். ஆனாலும் இப்பள்ளி மாணாக்கர்களுக்காக சிறிது நேரம் இவர்களால் ஏன் பொறுமையாய் இருக்க  முடியவில்லை? இன்னொருவரோ காவலர் நிற்கச் சொல்லியும் அவரைத் தாண்டி அவர் பாட்டுக்கு போய் விட்டார். இதுவே அவர்கள் குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்திருப்பார்களேயானால் இம்மாதிரி செய்பவர்களை இவர்களே எப்படித் திட்டி தீர்த்திருப்பார்கள்?

சரி, இது தான் இப்படியென்றால் மெத்த படித்தவர்கள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். எங்கள் அலுவலகத்தில் அனைவரும் லிஃப்ட் உபயோகப்படுத்துவது வழக்கம். பொதுவாக லிஃப்டில் இருந்து வெளியே வருபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்னரே லிஃப்டிற்குள் போக வேண்டியவர்கள் நுழைய வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயம் அப்படி நடக்காது. லிஃப்ட் ஒரு தளம் வந்து நின்று லிஃப்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே நின்றிருப்பவர்கள் வழியை மறித்துக் கொண்டி நிற்பார்கள். சில சமயம் கவலையே படாமல் அவர்கள் பாட்டிற்கு உள்ளே நுழைந்து விடுவர். இப்படிப் பட்ட பிரச்சினைகளைப் பார்த்து எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு லிஃப்ட் முன்பும் வைத்துள்ள அறிவிப்புத் தான் இது.

லிஃப்ட் அறிவிப்பு

லிஃப்ட் அறிவிப்பு

குறிச்சொற்கள்: ,

சமீபத்திய ஜூனியர் விகடன் படித்த போது, கண்ணில் பட்ட‌(உறுத்திய) தை பகிர்ந்துக்கொள்ளலாமென்று இப்பதிவு.

மலேசியாவில் ஒரு நிறுவனம் “பொன்னி” என்ற அரிசிப் பெயருக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது. எனவே இனிமேல் இந்திய விவசாயிகள் பொன்னி அரிசி என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வளவு வருடம் பொன்னி என்ற பெயரில் பொன்னி அரிசியை விற்று வந்த விவசாயிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

காப்புரிமை சட்டப்படி காப்புரிமை செய்யப்பட வேண்டிய பொருளும் அதன் பெயரும் எங்கேனும் உபயோகத்திலிருந்தால் அதை காப்புரிமை செய்ய முடியாது.

1986ல் தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் கண்டுப்பிடிப்பே இந்த பொன்னி அரிசி. ஆனால் இதை எல்லாம் மீறி எப்படி மலேசிய காப்புரிமை அலுவலகம் “பொன்னி அரிசி” என்ற பெயருக்கு காப்புரிமை வழங்கியது? விவரமாக படிக்க

ஆனால் பின்னர் போடப்பட்ட வழக்கினால் (அல்லது கொடுக்கப்பட்ட புகாரினால்?) அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காப்புரிமை நிராகரிக்கப் பட்டுவிட்டது (ஜூனியர் விகடன் செய்திப்படி, ஆனால் இணையத்தில் இதைப்பற்றி ஒன்றும் காணோம்) என்பது ஒரு ஆறுதலான செய்தி.

இதேப் போன்று சில வருடங்களுக்கு முன்பு பாஸ்மதி அரிசிக்கு அமெரிக்க நிறுவனம் ரைஸ்டெக்கிற்க்கு (RiceTec) காப்புரிமை வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கு இந்திய அரசு ரொம்ப வருடங்கள் போராடித் தான் அந்த காப்புரிமை ஆவணத்தில் உள்ள சிலவற்றை ரத்து செய்ய வைத்தது, இதில் முக்கியமானது அவர்கள் “பாஸ்மதி” என்கிற பெயருக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்பது தான். விவரமாக படிக்க1 மற்றும் விவரமாக படிக்க2

நமது கண்டுபிடிப்புகளுக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை முளையிலேயே கிள்ளி எறிய இந்திய அரசு ஏதாவது செய்தாக வேண்டும், இல்லையென்றால் நாம் அசந்து இருக்கும் சமயமாகப் பார்த்து அவர்கள் நம் கண்டுப்பிடிப்பை காப்புரிமை செய்து விடுவார்கள், பின்பு அரசு தும்பை விட்டு வாலை பிடித்த கதையாககத்தான் இருக்கும்.

ஒரு அதிர்ஷ்டக்கல் நகைக்கடை விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. ஒரு தெருவில் கீழே பணக்கட்டு ஒன்று விழுந்திருக்கிறது. அவ்வழியே போகின்ற எவரும் அதை பார்க்க வில்லை (அல்லது எடுக்கவில்லை). ஆனால்  அதிர்ஷ்டக்கல் வைத்த மோதிரம் போட்ட ஒருவருக்கு மட்டும் அந்த பணம் இருப்பது தெரிந்து அதை எடுத்துக்கொள்கிறார். இதுவா அதிர்ஷ்டம்? பணக்கட்டை கீழே போட்டவர் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்?

என்னை பொருத்த வரையில் இந்த அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களே ஒரு கொடுமை. இவற்றை தடை செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவது இன்னும் கொடுமை.

என்ன கொடுமை சார் இது?


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூலை 2018
தி செ பு விய வெ ஞா
« ஜன    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements