மோகனின் எண்ணங்கள்

இளம் காதலர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்

Posted on: ஜனவரி 10, 2009

ஜெர்மனியை சேர்ந்த இளம் காதலர்கள் ஆப்ரிக்கா சென்று திருமணம் செய்துக் கொள்வதற்காக பிரயாணம் மேற்கொண்டப் பொழுது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜெர்மனியை சேர்ந்த காதலர்கள் மிகா(Mika) மற்றும் அன்னா லேனா(Anna-Lena). இருவரது குடும்பங்களும் நட்பாக இருக்கின்றன. இந்த புத்தாண்டை இரு குடும்பங்களும் ஒன்றாக கொண்டாடி உள்ளனர். ஆப்ரிக்காவில் இதமாக கதகதப்பாக இருக்கும் என்பதால் அவர்கள் ஆப்ரிக்காவில் திருமணம் செய்ய முடிவு செய்து அடுத்த நாள் காலை அவர்கள் பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருந்தப் போது, இக்காதலர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பி உள்ளனர். கூடவே அன்னா லேனாவின் தங்கையை கல்யாணத்திற்கு சாட்சிக்காக அழைத்து கொண்டனர். வீட்டிலிருந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்று அங்கிருந்த ரயில் நிலையத்திலிருந்து ஹெனோவர் ரயில் நிலையத்திற்கு ரயில் பிடித்து அங்கிருந்து விமான நிலையம் செல்லும் ரயிலுக்கு காத்திருந்தனர்.

ரயில் நிலையத்திலிருந்த காவலர்கள் இந்த மூன்று பேரை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் இந்த மாதிரி நாங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து ஆப்ரிக்கா சென்று திருமணம் செய்துக் கொள்ள போவதாக அவர்களிடமும் சொல்லி இருக்கிறார்கள். அதில் சமாதானம் அடையாத காவலர்கள் அவர்கள் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் இக்காதலர்களை ஒப்படைத்து விட்டனர்.

இது என்ன ஒரு பெரிய விஷயம் என்று கேட்கிறீர்களா? காதலனுக்கு வயது ஆறு, காதலிக்கு வயது ஐந்து. திருமணத்திற்கு சாட்சியாக வந்தவர் வயது ஏழு. காவலர்கள் இக்குழந்தைகளிடம் பணம் மற்றும் பயணசீட்டு இல்லாமல் அங்கே(ஆப்பிரிக்கா) போக முடியாது என்று சமாதானப் படுத்தி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் பெற்றோர்களை அங்கே வர சொல்லி அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

mika

கல்யாணம் இப்போது நின்று விட்டாலும், இக்குழந்தைகள்  எப்போது வேண்டுமானாலும் மறுபடி இத்திட்டத்தை செய்யக் கூடும் என்று காவலர்கள் கூறுகின்றனர்.

Advertisements

14 பதில்கள் to "இளம் காதலர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்"

இது நல்ல காமெடியா இருக்கே :0))

வாங்க அது சரி, உலகம் எங்கே போகுது பாருங்க.

தலைப்ப மாத்துங்கப்பா….
பச்சிளம் குழந்தைகளை இப்படி இளம் காதலர்கள் என்று குறிப்பிடலாமா?.

அவங்களுக்கு ஏதோ ஒரு விளையாட்டு அவ்வுளவு தான்.

//தலைப்ப மாத்துங்கப்பா….
பச்சிளம் குழந்தைகளை இப்படி இளம் காதலர்கள் என்று குறிப்பிடலாமா?.

அவங்களுக்கு ஏதோ ஒரு விளையாட்டு அவ்வுளவு தான்.//

ஹிஹி , அக்கா ஒரு பரபரப்புக்காக வச்ச தலைப்பு தான் அது.

விளையாட்டு வினை ஆகிடிசீங்க பாருங்க.

நான் கூட இந்த மேட்டரை ஒரு நியூஸ் பேப்பருல படிச்சேன் அண்ணாச்சி…

வாழ்க காதல்…
வளர்க காதல்
இவர்களோடு…

//நான் கூட இந்த மேட்டரை ஒரு நியூஸ் பேப்பருல படிச்சேன் அண்ணாச்சி…

வாழ்க காதல்…
வளர்க காதல்
இவர்களோடு…//

வாங்க ஸ்ரீராம். காதல் வளரட்டும் கூடவே இவங்களும் வளரட்டும்.

இந்த இளம் காதலர்களை பிரிக்க எப்படி தான் அந்த கொடுர போலீஸ்காரர்களுக்கு மனசு வந்ததோ??

// இந்த இளம் காதலர்களை பிரிக்க எப்படி தான் அந்த கொடுர போலீஸ்காரர்களுக்கு மனசு வந்ததோ?? //
என்ன கொடுமை புவனேஷ் இது?

பொங்கல் பண்டிகைக்கு ஒரே ஒரு நாள் தான் விடுமுறை இருப்பதால் ஊருக்கு வர இயலாது அண்ணாச்சி…

// பொங்கல் பண்டிகைக்கு ஒரே ஒரு நாள் தான் விடுமுறை இருப்பதால் ஊருக்கு வர இயலாது அண்ணாச்சி… //

அடடா, நான் சேலம்ல தான் இருக்கேன் ஸ்ரீராம்.

//கூடவே அன்னா லேனாவின் தங்கையை கல்யாணத்திற்கு சாட்சிக்காக அழைத்து கொண்டனர்

//காதலனுக்கு வயது ஆறு, காதலிக்கு வயது ஐந்து. திருமணத்திற்கு சாட்சியாக வந்தவர் வயது ஏழு//

உங்கள் இடுகையை ஆழ்ந்து உள்வாங்கி படித்ததில் இந்த முரணை கண்டுபிடித்தேன்! (எனக்கு பரிசு கொடுப்பீங்களா??)

// உங்கள் இடுகையை ஆழ்ந்து உள்வாங்கி படித்ததில் இந்த முரணை கண்டுபிடித்தேன்! (எனக்கு பரிசு கொடுப்பீங்களா??) //
ஆகா, உங்களுக்கு வலையுலக சி.ஐ.டி. சங்கர் பட்டத்தை அளிக்கிறேன். (பரிசுக்கு காசு செலவு ஆகும், பட்டம் தான் சும்மாவே தரலாம்)

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி புவனேஷ், திருத்தி விடுகிறேன்.

இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா….

பத்து வயசுல ஒரு பய்யன் “பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுவது எப்படி?” அப்டின்னு புக்கே போடுறான்.இது என்ன ஜுஜுபி………. (இதுல அது நியூயார்க் ஓட best seller வேற).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements
%d bloggers like this: