மோகனின் எண்ணங்கள்

பெட்ரோல் திருட்டை சமாளிப்பது/தடுப்பது எப்படி?

Posted on: ஜனவரி 9, 2009

எங்கள் வீட்டு காம்பௌண்டில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளிலும் சேர்த்து 5 பைக்குகள் உள்ளன. இரவு வீட்டு காம்பௌண்டில் தான் நிறுத்துவோம். யார் வேண்டாலும் உள்ளே வரலாம். கேட் பூட்டினாலும் பிரயோஜனம் இல்லை. காம்பௌண்ட் சுவர் தாண்டி வந்து விடலாம். இப்பொழுது எதற்கு என் வீடு பற்றி கதை சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களாக காம்பௌண்டில் உள்ள அனைத்து பைக்குகளில் இருந்தும் பெட்ரோல் இரவு நேரங்களில் திருடப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் டியுபை கழற்றி பெட்ரோலை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த பெட்ரோல் திருடர்களை எப்படி பிடிப்பது என்றும் தெரிய வில்லை. எல்லாரும் தூங்கிய பின்பு தான் வந்து தங்கள் கைவரிசைகளை காட்டுகின்றனர். இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பைக் எடுக்கும் போது மறுபடி நிரப்பி கொள்ள வேண்டியது. இப்படித்தான் அவர் பெட்ரோல் திருட்டை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

இம்மாதிரியான பெட்ரோல் திருட்டை தடுக்க பெட்ரோல் லாக் எதோ இருக்கிறதாமே, யாரேனும் உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? அது உண்மையிலேயே பெட்ரோல் திருட்டை தடுக்கிறதா, உபயோகித்தவர்கள் சொல்லுங்களேன்.

Advertisements
குறிச்சொற்கள்: ,

14 பதில்கள் to "பெட்ரோல் திருட்டை சமாளிப்பது/தடுப்பது எப்படி?"

ஹாஹா.. 🙂 அவசியமான ஒன்று..
இதை விட இன்னொரு திருட்டு ஒன்று இருக்கிறது.. எங்க காம்பெளண்டில் நடப்பது அதுதான்.. இதைவிட பயங்கர எரிச்சல் (எனக்கு) தருவது அது.. அது, பைக் துடைக்கிற துணிதாங்க.. தினமும் ராத்திரி பைக்ல இருக்கும் காலைல வந்து பாத்தா இருக்காது.. அட பழைய துணிதான னு ஒரு நாள் விடலாம் ரெண்டு நாள் விடலாம்.. வாரவாரம் ஆனா, எரிச்சல்தான் வருது..

துணி இருக்கும் ஆனா இருக்காது.. 🙂
இதுக்கும் ஏதாவது ஒரு லாக் இருக்கானு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..! lol

வாங்க பீ’மார்கன், தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. அடங்கொன்னியா துணிய கூடவா திருடறாங்க? பாவம் அந்த திருடன். இனிமேல பைக்குல ரெண்டு துணி வச்சிடுங்க 🙂

You can you a lock which can be installed at the petrol opening lever, insted of the petrol opening lever you can use this lock.

so without the key no one cannot open the petrol from tank.

தன்ராஜ் தங்கள் முதல் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. பக்கம் உள்ள கடைகளில் கேட்டு பார்க்கிறேன்.

அது ஒன்னும் இல்ல அண்ணே, நம்ம வண்டில பெட்ரோல் ரிசர்வ், மெயின் அட்ஜஸ்ட் பண்ணற இடத்துல ஒரு லாக் பிட் பண்ணி கொடுப்பாங்க, அங்க சாவி போட்டு ஓபன் பண்ணுனா தான் பெட்ரோல் வரும்!! யூஸ் ஆகுதானு ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க (அதுக்கப்பறம் தான் நான் என் வண்டில மாட்டனும்)

வாங்க புவனேஷ்.

// அதுக்கப்பறம் தான் நான் என் வண்டில மாட்டனும //

ஒரு லாக் வாங்கி அனுப்புங்க, உபயோகப்படுத்திட்டு சொல்லுறேன்.

//இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

அதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

லாக் ஆஹ்… அதெல்லாம் யாருக்குங்க தெரியும் அண்ணாச்சி…
சரி உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க…
இப்ப எங்கயும் பெட்ரோல் கெடைக்க மாட்டேங்குது…
அதன் ஒரு தபா உங்க வூட்டாண்ட வந்தா ஒரு வாரம் நான் சமாளிச்சுக்குவேன்…

வாங்க ஸ்ரீராம்

// இப்ப எங்கயும் பெட்ரோல் கெடைக்க மாட்டேங்குது… //

சாதரணமாவே இங்க பெட்ரோல் இருக்காது. இந்த சமயத்துல அந்த திருடன் சார் எப்படி பெட்ரோல விட்டு வப்பாரு?

//இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நீங்க நெஜமாவே ரெம்ப நல்லவராத்தான் இருக்கீங்க. எதுக்கும் கொஞ்சம் உங்க அட்ரசை கொடுங்க(நமக்கு பெட்ரோல் வேண்டாங்க) .

//நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார்.

பார்த்து , அப்புறம் பெட்ரோல் இல்லாம எதுக்குய்யா பைக்குன்னு தூக்கிட்டு போயிடபோராய்ங்க.

எனக்கும் இது நிகழ்ந்தது.உடனே லாக் போட்டுவிட்டேன் (ரூ.80 என்று நினைவு) இப்போது பெட்ரோல் திருட்டு நிகழ்வதில்லை.

பிரியன் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. நானும் வாங்கி விட வேண்டியது தான்.

இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ….வேணும்னா அந்த பைப்ப தூக்கி இங்கிட்டு போடுங்கோ….

கிணறு கிணறா அனுப்பி வைக்கிறோம்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements
%d bloggers like this: