மோகனின் எண்ணங்கள்

அடுத்து என்ன இலவசமாகத் தரலாம்?

Posted on: திசெம்பர் 18, 2008

செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:

 • புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
 • தீபாவளி பண்டிகைக்கு 100 ருபாய் மதிப்புள்ள பட்டாசு, 100 ருபாய் மதிப்புள்ள இனிப்பு இலவசமாகத் தரலாம்.
 • தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
 • அக்ஷய த்ரிதை நாளன்று 0.0000001 கிராம் தங்கக் காசு இலவசமாகத் தரலாம்.
 • விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • புனித வெள்ளியன்று கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ஆயுத பூஜை நாளன்று பொறி மற்றும் இன்ன பிற பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
 • குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம்.

மக்களே இது போல இன்னும் என்ன என்ன இலவசமாகத் தரலாம் என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Advertisements

45 பதில்கள் to "அடுத்து என்ன இலவசமாகத் தரலாம்?"

future PM aga vaippu ullathu nanba

கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை இலவசமா தரலாம்!!
கல்யாண நாள் அன்று ஆண்களுக்கு ஒரு கை குட்டையும், பெண்களுக்கு ஒரு சாம்பார் கரண்டியும் (வேற எதுக்கு புருசங்களை அடிக்க தான்!) குடுக்கலாம் !!

//ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.

**பிரியாணி செய்ய தேவைவான **

//விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.

அப்போ தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் எல்லாம் என்ன வேலை நாளா? ‘கலைஞர் டிவி’ தான் பதில் சொல்லணும் !!

ஆதரவை அள்ளித் தரும் புவனேஷஷிர்க்கு மிக்க நன்றி.

சுந்தர்மீனாக்ஷி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அண்ணா, என்னங்கன்னா லோக்கல் கவுன்சலர் ரேஞ்சே நமக்கு கஷ்டம், இதுல பிரதம மந்திரியா?

//கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை இலவசமா தரலாம்!!
கல்யாண நாள் அன்று ஆண்களுக்கு ஒரு கை குட்டையும், பெண்களுக்கு ஒரு சாம்பார் கரண்டியும் (வேற எதுக்கு புருசங்களை அடிக்க தான்!) குடுக்கலாம் !!//

கல்யாணத்துக்கு ஒரு ஆணை இலவசமா தர கூடாதா?
இது தரமாயே புருசங்க பாடு திண்டாட்டம், இதையும் கொடுத்துட்ட பாவம் அவிங்க.

//**பிரியாணி செய்ய தேவைவான **//

நன்றி புவனேஷ் சரியான தகவல் தந்தமைக்கு

//அப்போ தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் எல்லாம் என்ன வேலை நாளா? ‘கலைஞர் டிவி’ தான் பதில் சொல்லணும் !!//

நாளைக்கு முரசொலி பாத்தா தெரியுமோ?

//குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம். //

ஹாஹாஹாஹாஹாஹா ……….. இதுதான் நச் கமெண்டு

நீங்க சொல்லுறதை எல்லாம் இவங்க தந்தாலும் தந்துடுவாங்க…

எதுக்கும் இந்த ஐடியா பூராவும் நான் சொன்னது தான் என்று பேட்டன்ட் போட்டுக்கோங்க…

எல்லாம் சரி அண்ணாச்சி… இவங்க இதை எல்லாம் தருவதற்கு முன்னால் நம்ம நினைவு நாள் வந்துடுச்சுன்னா என்ன தருவாங்கன்ன்னு நீங்க சொல்லவே இல்லையே…

// தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம். //

அல்வா எல்லாம் ரொம்ப காஸ்ட்லி அண்ணாச்சி …
ஆளுக்கொரு நாமக் கட்டி வேணும்னா தருவாங்க…
அதுலயும் ஊழல் நடந்து ஒரு விசாரணை கமிஷன் வெச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை …

//தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.

ha ha ha

//கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை இலவசமா தரலாம்!!
கல்யாண நாள் அன்று ஆண்களுக்கு ஒரு கை குட்டையும், பெண்களுக்கு ஒரு சாம்பார் கரண்டியும் (வேற எதுக்கு புருசங்களை அடிக்க தான்!) குடுக்கலாம் !!

யப்பா மொழச்சி மூணு எல விட முன்னால ஒனக்கு எதுக்கு இந்த ஆசப்பா

//
தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
//

அல்வா தான் இப்பவே குடுத்துக்கிட்டு இருக்காங்களே, இன்னுமா?? போதுஞ்சாமி போதும்…இவய்ங்க ஆட்சி நடத்துனதும் போதும்…அல்வா குடுத்ததும் போதும்…

அக்கா, இப்போ எல்லாம் இந்தியால பொண்ணு கிடைகறது கஷ்டம்! அப்படியே கிடைச்சாலும் மணல் கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி கண்டிஷன் வேற!!

// ஹாஹாஹாஹாஹாஹா ……….. இதுதான் நச் கமெண்டு //

அத்திரி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

//நீங்க சொல்லுறதை எல்லாம் இவங்க தந்தாலும் தந்துடுவாங்க… //

ஸ்ரீராம், அடுத்த தேர்தல் வாக்குறுதியில் இவை இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

//எதுக்கும் இந்த ஐடியா பூராவும் நான் சொன்னது தான் என்று பேட்டன்ட் போட்டுக்கோங்க… //

இந்த ஐடியாக்களையும் நான் இலவசமாகத் தருகிறேன். 🙂

//எல்லாம் சரி அண்ணாச்சி… இவங்க இதை எல்லாம் தருவதற்கு முன்னால் நம்ம நினைவு நாள் வந்துடுச்சுன்னா என்ன தருவாங்கன்ன்னு நீங்க சொல்லவே இல்லையே…//

அதுக்கு ஒண்ணும் தரமாட்டாங்க, நம்ம வோட்ட அவங்களே போட்டுடுவாங்க. அவ்ளோதான்.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

//அல்வா எல்லாம் ரொம்ப காஸ்ட்லி அண்ணாச்சி …
ஆளுக்கொரு நாமக் கட்டி வேணும்னா தருவாங்க…
அதுலயும் ஊழல் நடந்து ஒரு விசாரணை கமிஷன் வெச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை …//

நடக்கலாம். அப்புறம் நடுராத்திரியில கைது பண்ணுவாங்க.

//ha ha ha//
குந்தவை அக்கா தங்கள் வருகைக்கும் ஹாஹா விற்கும் மிக்க நன்றி.

//யப்பா மொழச்சி மூணு எல விட முன்னால ஒனக்கு எதுக்கு இந்த ஆசப்பா//

புவனேஷ் ஒரு வேலை பொண்ணு தேடி வெறுத்து போய்ட்டாரோ என்னவோ?

//அக்கா, இப்போ எல்லாம் இந்தியால பொண்ணு கிடைகறது கஷ்டம்! அப்படியே கிடைச்சாலும் மணல் கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி கண்டிஷன் வேற!!//

//புவனேஷ் ஒரு வேலை பொண்ணு தேடி வெறுத்து போய்ட்டாரோ என்னவோ?//

அவரே இதை உறுதி செஞ்சிட்டார்.

//அல்வா தான் இப்பவே குடுத்துக்கிட்டு இருக்காங்களே, இன்னுமா?? போதுஞ்சாமி போதும்…இவய்ங்க ஆட்சி நடத்துனதும் போதும்…அல்வா குடுத்ததும் போதும்…//

சரியாகச் சொன்னீங்க அது சரி. அல்வா எப்போதிருந்தோ கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் என்று ஒரு யோசனை சொல்லி இருக்கிறேன். ஹிஹி. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அது சரி.

SUPER COMEDY…..SIRICHU SIRICHU VAIRU VALI THANGA MUDIYALLLE…..!!!!

///மக்களே இது போல இன்னும் என்ன என்ன இலவசமாகத் தரலாம் என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.///

இது மாதிரி ஐடியா தந்தால் பத்து பின்னூட்டம் இலவசமாக தரலாம்..

பிரமாதம் மிகவும் ரசித்துச் சிரித்தேன்!தொடருங்கள்!வாழ்த்துக்கள்!
கமலா

அண்ணாச்சி நான் உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன். விவரங்களுக்கு என் வலைப் பூவிற்கு வாருங்கள்.

என்ன அணிமாஜி வந்து ஒரு சிரிப்பானோட போய்டீங்க?

//SUPER COMEDY…..SIRICHU SIRICHU VAIRU VALI THANGA MUDIYALLLE…..!!!!//

பாலாஜி, தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி என் பதிவு பக்கம் வந்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

//இது மாதிரி ஐடியா தந்தால் பத்து பின்னூட்டம் இலவசமாக தரலாம்..//

இது எதுவும் இல்லாமையே பின்னூட்டங்களை அள்ளி தரும் வள்ளல் அய்யா நீர்.

//நான் தான் 25//
ஆமாம்பா, நீதான் 25 வது

//பிரமாதம் மிகவும் ரசித்துச் சிரித்தேன்!தொடருங்கள்!வாழ்த்துக்கள்!
கமலா//

நன்றி கமலாம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளிற்கும். என்னால் முயன்றதை சிறப்பாக தர முயற்சிக்கிறேன்.

//அண்ணாச்சி நான் உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன். விவரங்களுக்கு என் வலைப் பூவிற்கு வாருங்கள்.//

சரிங்க ஸ்ரீராம். ஆனா கொஞ்ச நாள் காத்திருக்கணும்.

கலக்கல் பதிவு. எனக்கு சில விவகாரமான இலவச ஐடியா தோனுது, வேணாம் விட்டுருங்க

வீட்டுவேலைச் செய்ய ஒருத்தரை இலவசமாத் தரலாம்.

ஹா ஹா ஹா

டிவி கொடுத்துட்டாங்க, இந்த முறை பொருளாதார நெருக்கடியால் எல்லோருக்கும் பாக்கெட் FM கொடுக்கலாம் 🙂

குடுகுடுப்பை, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. அந்த விவகாரமான யோசனைகளை எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன் :).

//வீட்டுவேலைச் செய்ய ஒருத்தரை இலவசமாத் தரலாம்.//

வாங்க துளசி மேடம், இது கூட நல்ல யோசனையா இருக்கே 🙂

கிரி அதெல்லாம் செல்லாது, பாக்கெட் எப்.எம். 50 ரூபாய்க்கு குறைவாகத்தான் இருக்கும்.

அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும் /??

ரொம்ப நாளா காணோம் ???

கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து …
அதான் ஆத்த விட்ட பறந்துடுத்து…

புவனேஷ நான் ரொம்ப பிஸி (சூரியன் கவுண்டமணி ஸ்டைல்ல படிங்க)

வெகேசன்ல இருக்கேன். அதன் சரியா பின்னூட்டம் போடறதுல்ல. பதிவுக்கும் ஒன்னும் மேட்டர் கெடைக்கலை. இங்கிலிஷ்காரன் உங்க வழக்கொழிந்த வார்த்தைகள் பதிவுக்கு இன்னும் வார்த்தை கெடைக்கலை. கிடைக்கறப்போ ஒரு பதிவு போட்டுடறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

 • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

திசெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements
%d bloggers like this: