Posted by: மோகன் on: டிசம்பர் 31, 2008
என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).
நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 3, 2008
என் கல்லூரிக்கால கலாட்டாக்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன்.
எனது நண்பனிற்கு லேப் வைவா-வில் கேட்கப்பட்ட கேள்வி: ”What is a protocol?“. அதற்கு அவன் சொன்ன பதில் “Its our college function“. என் நண்பன் படித்த கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் கணினித் துறை சார்பாக நடத்தப்படும் விழா பெயர்தான் “Protocol”. அதைத்தான் அப்பெருந்தகை பதிலாக கூறியுள்ளார்.
மேனேஜ்மென்ட் பற்றி எங்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தப்போது வழக்கம்போல அதை கவனிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த [...]
அண்மைய மறுமொழிகள்