Posted by: மோகன் on: ஜனவரி 2, 2009
சில நாட்களுக்கு முன் நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா என்னுடையப்பதிவிற்கு “Butterfly Award” கொடுத்துள்ளார். இந்த அவார்ட் “Coolest Blog I ever Know (இதை எப்படி தமிழில் சொல்லுவது?)” க்கு தரப்படுவதாம்.

இந்த அவார்ட் கொடுத்த நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த அவார்ட் (விருது -என்று சொல்லலாமா?) பெற எனது பதிவிற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை.(இது தான் சாக்குன்னு விருதை திருப்பி கேட்டுடாதீங்க அணிமா, ஹிஹி). கொடுத்ததை திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்காது மற்றும் அணிமா மனம் புண்படும் என்பதாலும் இந்த விருதை நானே வைத்துக் கொள்கிறேன். இப்பொழுது இந்த விருதுக்கு நானும் சிலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கிரி – மிகுந்த இயல்பாக பதிவுகள் எழுதுபவர்.
அது சரி – அவருடைய வேதாளம்-மாதி கதைகள்
குந்தவை – பெரும்பாலும் அவருடைய குழந்தை கண்மணியின் குறும்புகளை பற்றி எழுதுவார். அவ்வப்பொழுது சொந்த அனுபவங்களையும் சொல்வார். அதில் பள்ளிக்கு கட் அடித்த அனுபவத்தை படித்து பாருங்கள். ஹாஹா.
சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.
மோகனின் எண்ணங்கள் <—-
அணிமா <—-
ராகவன் <—-
ரம்யா <—-
பூர்ணிமா <—-
விஜய் <—–
திவ்ய பிரியா <——
Gils/Shanki—->
பிரியா –>
Kartz—->
Akansha—->
Infinity—->
Simple Elegant Girl —- >
Empty Streets—–>
The Blog Reviewer—>
biotecK—->
KisAhberuang—->
blogscope >>>>>>
பின்குறிப்பு:
இவ்விருதை ஏன் எனக்கு கொடுக்க வில்லை என்றும் ஏன் எனக்கு கொடுத்தாய் என்றும் யாரும் கோவித்துக் கொள்ள வேண்டாம்.
விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் மோகன்
)
எனக்கெல்லாம் விருதா??? ரொம்ப தர்ம சங்கடத்துல மாட்டி விட்டுட்டீங்களே!
ஆஹான்னு ஏத்துக்கலாம், அதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கு…ஏத்துக்கிட்டா என் ப்ளாக் ஏதோ நல்ல ப்ளாக்குன்னு ஒத்துக்கிட்டா மாதிரி ஆயிடுமே…நான் அடிக்கிறதே ஜல்லி….எழுதறதெல்லாம் மொக்கை….அதனால விருதை ஏத்துக்கிற தகுதி எனக்கு இல்லைங்க….
தப்பா எடுத்துக்காதீங்க…இந்த விருதை நல்லா எழுதற வேற யாருக்காவது கொடுத்துருங்களேன், ப்ளீஸ்!
(லிங்க் பத்தி பிரச்சினை இல்லை…இதுவரையில் நான் படிச்சதுல நல்லா எழுதறாங்கன்னு நான் நினைக்கிற பதிவுகளுக்கு ஏற்கனவே என் சைட்ல இருந்து லிங்க் இருக்கு…அதுல உங்க பதிவும் ஒண்ணு!)
மறுப்புக்கு மன்னிக்க!
எனக்கு உங்கள் அன்பை கொடுத்தமைக்கு நன்றி மோகன்.
தொடர் விளையாட்டு என்றாலே கலவரம் ஆகி விடுவேன். ஆனால் இதில் உள்ள விதி முறைகள் படி எனக்கு இதை தொடர்வது சிரமம். முயற்சி செய்ய முயற்சிக்கிறேன்
வாழ்த்து கூறிய சக்திக்கு நன்றி
என்ன கன்னு சவுக்கியமா??
இப்போ போறேன்..
கண்டிப்பா வருவேன்
விருது வாங்குன அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா!
ஜனவரி 2, 2009 இல் 5:59 பிற்பகல்
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!
அப்புறம் நம்ம கிரி-ஜிக்கு இந்த விருதை வழங்கினதுக்கு ரொம்ப நன்றிங்க!!!
ஜனவரி 2, 2009 இல் 6:27 பிற்பகல்
பாசகி உங்கள் வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி. கிரிஜிக்கு இந்த விருது எல்லாம் சும்மா.