மோகனின் எண்ணங்கள்

Archive for அக்டோபர் 2008

நான் சிறிது நாட்களாக புகைப்படக் கலையை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் முயற்சி பண்ணியவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாமே (உங்களுக்கு வேறு வழியில்லை) என்று இப்பதிவு.
சமீப காலமாகத்தான் நான் PIT (Photography in Tamil பதிவு) படித்து வருகிறேன். அதில் சொல்லி இருந்த HDR தொழில்நுட்பத்தை முயற்சித்து பார்க்க்கலாம் என்று எனது சோனி P73 கேமரா எடுத்து பார்த்தால் அப்பதிவில் சொல்லி இருப்பது போன்று “AEB” வசதி என் கேமராவில் இல்லை. எனினும் தன் முயற்சியில் சற்றும் [...]

குறிச்சொற்கள்: , , ,

சென்னையில் நடைபெறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தை பற்றி  புரட்சித் தமிழன் சத்யராஜ் வழக்கம் போல ஆவேசமாக பேசியிருப்பது என்னவென்றால்:
1) சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள்.
2) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.
இவர் சம்பந்தப்பட்ட துறை நடத்திய ஊர்வலத்தில் அவரது வீட்டில் முக்கியமான நிகழ்ச்சி [...]

மின்சார சமாச்சாரம்

Posted by: மோகன் on: அக்டோபர் 22, 2008

தமிழக அரசு(மின் துறை) சில நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் சம்பந்தமாக சில விஷயங்களை அறிவித்தது (அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு, என்னுடைய பதிவு எண்ணிக்கையை ++ செய்யவே இப்பதிவு):
1)தனியார் நடத்தும் விழாக்களுக்கு(ஆலயத் திருவிழாக்கள் நீங்கலாக) ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
இது கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இருக்கலாம். இதை எல்லா கட்சி கூட்டங்களுக்கும் கடுமையாக அமுல்படுத்தவேண்டும். [...]

புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.
காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் [...]

சினிமா சினிமா – தொடர் பதிவு

Posted by: மோகன் on: அக்டோபர் 17, 2008

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? (அணிமா ஸ்டைல்)
1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
அடடா, எவ்வயதில் முதல் சினிமா பார்த்தேன் என்பது எனக்கு நினைவு இல்லையே. அப்பொழுதே வலைப்பதிவு வசதி இருந்திருந்தால் நான் அதை பதிவு செய்திருப்பேன். இப்பொழுது உபயோகமாக இருந்திருக்கும். ஆகையால் வலைப்பதிவு, இணையம் போன்றவற்றை அப்போது கண்டு பிடிக்காததற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
மெய்யாலுமே இதற்கும் [...]

குறிச்சொற்கள்:

மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?

Posted by: மோகன் on: அக்டோபர் 11, 2008

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு [...]

காதலில் விழுந்தேன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சி மற்றும் சிலர் இப்படம் வெளியாவதை விரும்பவில்லையென்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரமிது.
அந்த படம் எப்படி இருக்கிறதென்றுத் தெரியவில்லை. ஆனால் சன் நிறுவனம் அதனுடைய எல்லா அலைவரிசைகளிலும் இப்படத்திற்கு 5 நிமிடங்களுக்கொரு தடவை விளம்பரம் செய்து வருகிறது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இது அளவுக்கு மீறிய விளம்பரமாகவே தோன்றுகிறது.
இப்படத்திற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாகவும் இப்படம் சில இடங்களில் [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,671 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

அக்டோபர் 2008
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters