Posted by: மோகன் on: ஆகஸ்ட் 28, 2008
இந்த வாரச் செய்திகள்
நகைச்சுவை(அல்லது அதிர்ச்சி) செய்திகள்:
சென்ற வாரம் (24/ஆகஸ்ட்) கலைஞர் தொலைக்காட்சியில் “டாப் 10 படங்களில்” இரண்டாமிடத்தைப் பிடித்த படம் எதுவென்றுத் தெரியுமா? உளியின் ஓசை (மக்களே அழாதீங்க, என்ன பண்றது?)
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பேன்: சொன்னது யாரு? சுப்பிரமணியசாமி! (அதிர்ச்சியடையாதீங்க)
ஏக்கச் செய்திகள்
வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர் (இப்படி சொன்னாலாவது யாராவது என்னுடைய கட்சிப் பற்றி பேசுங்களேன். இல்லை திட்டியாவது ஒரு அறிக்கை விடுங்களேன்)
குழப்பச் செய்திகள்
பாமக இல்லாததால் திமுக பலவீனமடையவில்லை: கருணாநிதி – யாஹூசெய்திகள்
பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 25, 2008
ஒலிம்பிக்ஸ் 2008, நேற்றோடு இனிதே முடிந்தது. அதிக தங்க பதக்கங்களைப் (51) பெற்று முன்னிலையில் இருக்கிறது சீனா. ஆனால் அதற்கு அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் படும் கஷ்டங்களைப் பாருங்கள். சின்ன வயதில் அவர்கள் விருப்பம் என்னவென்று கூடக் கேட்காமல் அவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பயிற்சிக் கொடுத்து அவர்களை பதக்கங்களுக்கு தயார்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? ஒருவேளை இவ்வீரர்கள் பதக்கம் பெறவில்லையென்றால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
இப்படங்கள் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
சீன அரசு பதக்கங்களைப் பெறுவதற்கு இப்படி கஷ்டப்படுகின்றது என்றால், நமது [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 23, 2008
இன்று நடந்த இரண்டு விஷயங்களை பற்றியே இவ்விடுகை.
முதல் விஷயம், இன்று காலை பணம் எடுக்க ATM போன போது, என்னுடைய பைக்-ஐ
“No parking” நிறுத்தி விட்டு பணம் எடுத்து விட்டு வண்டி எடுக்க போகும் போது போக்குவரத்து காவலர், ஒரு வாகனத்தோடு வந்து “No Parking” ல் இருந்த வண்டிகளை எடுத்து அவ்வாகனத்தில் ஏற்ற சொன்னார். அவர்கள் முதலில் கை வைத்தது என் வண்டியில் தான். நான் போக்குவரத்து காவலரிடம் “அய்யா தெரியாமல் நிறுத்தி விட்டேன், மன்னிச்சிக்குங்க” [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 7, 2008
அஸின் சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில்:
“போக்கிரி’, “வேல்’ ஆகிய வெற்றி பெற்ற படங்களின் ஹீரோயினான பிறகும் கோலிவுட்டுக்கு குட்பை சொல்லி விட்டீர்களே?
அதெப்படி முடிவு செய்தீர்கள். ஹிந்தி “கஜினி’ படம் மற்றும் சில புராஜெக்ட்ஸ் வேலைகளுக்காக மும்பை லோகன்ந்த்வாலா காம்ப்ளக்ஸில் உள்ள எனது அபார்ட்மெண்டுக்கு கடந்த டிசம்பரில் குடி பெயர்ந்தேன். எனது பிறந்த வீடு கோலிவுட்தானே! அதை எப்படி விடுவேன். நல்ல கேரக்டர்கள் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன்.
இதையே மலையாள படவுலக பத்திரிக்கை அஸினிடம் பேட்டி எடுத்திருந்தால் (ஒரு கற்பனை, [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 3, 2008
என் கல்லூரிக்கால கலாட்டாக்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன்.
எனது நண்பனிற்கு லேப் வைவா-வில் கேட்கப்பட்ட கேள்வி: ”What is a protocol?“. அதற்கு அவன் சொன்ன பதில் “Its our college function“. என் நண்பன் படித்த கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் கணினித் துறை சார்பாக நடத்தப்படும் விழா பெயர்தான் “Protocol”. அதைத்தான் அப்பெருந்தகை பதிலாக கூறியுள்ளார்.
மேனேஜ்மென்ட் பற்றி எங்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தப்போது வழக்கம்போல அதை கவனிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த [...]
அண்மைய மறுமொழிகள்