மோகனின் எண்ணங்கள்

Archive for ஜூன் 2008

சுத்த அசைவம்

Posted by: மோகன் on: ஜூன் 26, 2008

சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது

என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.

எப்பொழுதாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரு பிவிஆர், ஃபன் திரையரங்ககிளிற்க்கு போவதுண்டு. அங்கு டிக்கெட் விலை உண்மையாகவே யானை விலை, குதிரை விலை (யானை விலை சரி, அது என்ன குதிரை விலை, இச்சொற்றொடர் எப்படி/எப்பொழுது வந்தது?). திரையரங்கினுள் பட இடைவேளைக்கு சற்று முன்பு திரையரங்க உணவகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்டர் எடுக்க வருவார்கள்.
இது எனது சிறுவயது திரையரங்கு சம்பந்தப்பட்ட நினைவுகளை கொண்டு வருகிறது. அந்த கொட்டாய்களில் இடைவேளை சமயம் கைமுறுக்கு, தட்டுவடை இன்னபிற சாப்பிடும் சமாச்சாரங்களை திரையரங்கினுள் [...]

காப்புரிமை நமதுரிமை

Posted by: மோகன் on: ஜூன் 17, 2008

சமீபத்திய ஜூனியர் விகடன் படித்த போது, கண்ணில் பட்ட‌(உறுத்திய) தை பகிர்ந்துக்கொள்ளலாமென்று இப்பதிவு.
மலேசியாவில் ஒரு நிறுவனம் “பொன்னி” என்ற அரிசிப் பெயருக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது. எனவே இனிமேல் இந்திய விவசாயிகள் பொன்னி அரிசி என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வளவு வருடம் பொன்னி என்ற பெயரில் பொன்னி அரிசியை விற்று வந்த விவசாயிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
காப்புரிமை சட்டப்படி காப்புரிமை செய்யப்பட வேண்டிய பொருளும் அதன் பெயரும் எங்கேனும் உபயோகத்திலிருந்தால் அதை காப்புரிமை செய்ய முடியாது.
1986ல் [...]

வேலைப்பளு (நெசமாத்தாங்கோ) காரணமாகவும் எதைப் பற்றி எழுதுவது என்பதைப் பற்றி தெரியாததாலும் இம்மாதம் சரியாக வலைப்பதிவு செய்ய முடியவில்லை.
நான் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறேன். இனிமேல் மேட்டர் கிடைக்காதப் போது, தமிழ் பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன இடுகையை ரீமேக் செய்து ஆங்கிலப்பதிவிலும், ஆங்கிலப்பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன பிளாக்கை தமிழில் மொழிமாற்றம் செய்தும் பதிவுகளை நிரப்பலாமென்று இருக்கிறேன். படங்களை மட்டும் தான் ரீமேக் செய்ய வேண்டுமா என்ன? பதிவுகளை ரீமேக் செய்ய கூடாதா? ஹிஹி

குறிச்சொற்கள்: , , ,

சாரி

Posted by: மோகன் on: ஜூன் 2, 2008

நான் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது (1994) படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு மடம் சார்பாக 3-4 மாவட்டங்களிடையே விவேகானந்தரைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் பட்டது. நான் அதில் எனது பள்ளி சார்பாக கலந்துக் கொண்டேன். எனது பள்ளி ஆசிரியர்களும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவினர். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றிருப்பதாக எங்கள் பள்ளிக்கு தகவல் வந்தது. ஜனவரி மாதம் கோவையில் உள்ள அம்மடத்தில் நடைபெறும் ஒரு பூஜை [...]

குறிச்சொற்கள்: ,

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,677 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters