மோகனின் எண்ணங்கள்

தென்னிந்தியா – தமிழகம்

Posted by: மோகன் on: மே 19, 2008

பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என்று குறிப்பிடுவது/கூப்பிடுவது வழக்கம்.  இது பொதுவாக தமிழகத்தை சாராதவர்களுக்கு பிடிக்காது என்று மட்டுமே அவர்கள் (தமிழகத்தை சாராதவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்த வரை  தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் கூட மதராசி என்று விளிப்பது பிடிக்காது. நம்மை பொருத்த வரையில் மதராசி என்பது நக்கலாக சொல்வதற்கும் கேலி செய்வதற்கும் வடக்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை. ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து பொதுவாக யாரும் “மதராசி” என்று உபயோகிப்பதில்லை.

அது போலவே சில ஊடகங்களில் தென்னிந்தியா என்றால் அது தமிழகம் என்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அது மற்ற தென் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவை இல்லாத ஒரு உணர்வை உருவாக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் (இது நான் படித்துத் தெரிந்துக் கொண்டது) ஒரு செய்தி தொலைக்காட்சியில் ராமர் பாலத்தை பற்றிய ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் ராமருக்கு கோவில்கள் கிடையாது, தமிழக மக்கள் ராமரை அதிகமாக வழிப்படுவது இல்லை என்று சொன்னாராம் (அப்படியா?). அதனை கேட்டு அந்த நிகழ்ச்சியை வழி நடத்தி வந்தவர் அதை இப்படி சொன்னார், “தென்னிந்தியாவில் ராமர் வழிபாடு கிடையாது”. இந்நிகழ்ச்சியைப் பார்த்த எனது அலுவலக நண்பர் (அவர் தமிழகத்தை சார்ந்தவரல்ல) தமிழத்தில் ராமர் வழிபாடு இல்லையென்றால் அதை என் பொதுவாக தென்னிந்தியா என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று அவருடைய வலைப்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார். எனக்கு அவருடைய கேள்வி நியாயமான ஒன்று என்று தான் படுகிறது.

இது இப்படியென்றால்,  இன்னொரு புறம் நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று மற்ற மாநிலத்தவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் உடனே கேட்கும் கேள்வி “நீ சென்னையை சேர்ந்தவனா?”. இதுவும் ஒரு வகையில் சங்கடத்திற்கு உள்ளாக்கும் கேள்வி. தமிழகத்தை சேர்ந்தவன் என்றால் பொதுவாக ஏன் எல்லோரும் சென்னையை சேர்ந்தவன் என்று நினைக்க வேண்டும், நான் அதற்கு “நான் சேலத்தை சேர்ந்தவன், சென்னையை சேர்ந்தவன் அல்ல” என்று பதில் கூறுவேன்.

2 பதில்கள் -க்கு "தென்னிந்தியா – தமிழகம்"

எனக்கு ஒன்றும் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை !. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க நியாயம் இல்லை !. இந்தியா என்றால் டில்லி (or) மும்பை தான் அந்நிய நாட்டவருக்கு உடனே நினிவில் வரும். அதே போல் இந்தியாவில் இருப்பவர்க்கு தென்னிந்தியா என்றால் சென்னை (or) தமிழ் என்பது சட்டென்று நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாது!

ஸ்ரீனிவாசா, வலைப்பதிவுலகத்திற்கு நல்வரவு

உன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

சில தடவை இம்மாதிரி நடந்தால் பொறுத்துக்கொள்ளலாம். பல தடவை இச்சம்பவம் நடந்துள்ளது. அதுவும் பெங்களூரு வந்தப் பிறகு நான் ஊருக்கு போகிறேனென்றால் உடன் வேலை செய்பவர்கள் “சென்னைக்கா” என்று கேட்பர். அதை பொறுக்க முடியாமலும் தான் இப்பதிவு :)

எப்படி தமிழில் டைப் செய்தாய்?

மறுமொழி இடுக

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,215 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

இணைப்புகள்

Page Rank


  • vivek: Arumai Arumai
  • Bhuvanesh: //யாருங்க அது? சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப
  • மோகன்: // நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்க

நாள்காட்டி

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters