Posted by: மோகன் on: மே 7, 2008
KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS தியேட்டரில் பார்த்தோம்.
பின் VPS தியேட்டரை வேறு ஒரு குழுமம் வாங்கி “KS தியேட்டர்” என்று பெயரிட்டார்கள். அதில் முதன்முதலில் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தை திரையிட்டார்கள். அதற்கு அப்படத்தில் நடித்த கலைஞர்கள் வந்து இருந்தனர் (விஜயகாந்த் உட்பட). KS தியேட்டரில் புதுப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு அதில் ஆங்கில படங்கள் மட்டும் திரையிட ஆரம்பித்தார்கள். திரையரங்கை நன்றாக பராமரிப்பார்கள். இப்பொழுது எப்படி இருக்கிறதென்று தெரிய வில்லை.
KS தியேட்டர் எங்கள் வீட்டிற்கு பக்கம் வேறு இருந்தது. பாலிடெக்னிக் நண்பர்கள் கூட்டத்தோடு வார இறுதி நாட்களில் KS தியேட்டருக்கு சென்று விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் சில: Rumble in the bronx,Eraser, Species. சில சமயங்களில் அதில் ஹிந்தி படங்களும் திரையிட்டார்கள். அப்படி நான் பார்த்த படம் “ராஜா ஹிந்துஸ்தானி”, பார்த்த பின்பு தான் அது ரொம்ப வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் ஹிந்தி பதிப்பு என்று.
பின்பு நான் 1997ல் கோவைக்கு பொறியியல் படிப்பிற்காக சென்று விட்டேன். ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சேலம் வந்து விடுவேன். KS தியேட்டரில் அப்பொழுது பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றுவார்கள். ஆகவே நானும் எனது நண்பன் சீனிவாசனும் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் பார்த்து விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் நினைவுக்கு வருபவை சில “Ransom, Jurassic Park 2″.
படித்து முடித்து சென்னையில் வேலை கிடைத்து சென்னை சென்ற பின், சேலத்துக்கு மாதம் ஒரு முறை தான் வர முடிந்தது. தவிர சீனிவாசனுக்கு மைசூரில் வேலை கிடைத்து அவனும் மைசூர் சென்று விட்டான். அவன் சேலம் வருவது 2-3 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதனால் படம் பார்க்கும் வழக்கமும் குறைந்தது.
காலம் மாறி விட்டது. ஆர்குட்டில் நான் “ARRS Multiplex” க்கு குழுமங்களை பார்த்து இருக்கிறேன். என்னை(ங்களை) போன்று KS திரையரங்கிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களா இன்னும்?
Hi Salem friends,
I am ravi from Thailand.
Naan.. Salem Karungalpatty paiyan…
K.S. theater is still functioning.. I have seen Kuruvi during my last visit to Salem.
Does ARK complex start screening films?
Dear Mohan, You r mentioned ARK Complex.But poo ravi mentioning ARRS complex is situated near New bus stand .In
that complex there r 5 theaters.One sad news that ARK complex now closed.
Hello Mr. Mohan,
Enakku ippodhu 27 vayasu aagudhu. Chennai-la oru MNC-la velai paarkirraen.
Ennaip polave k.s theater rasigargal sila paer iruppadhai ninaikkumbozhudhu sakkarai saappitadhu pola inikkudhu!!!
Ungalukku eppadiyo theriyavillai…enakku K.S yendral UYIR….!andha theaterai naan theater thirandhadhil irundhu swaasam poal pin thodargiraen… adhan maatrangall, DTS seetrangall, Nunukkangall anaiththaiyum naan arivaen.
Enakku apppodhu vayasu sumaar 15-kku pakkamaaga vayasu irukkum endru ninaikkiraen(1991, when K.S was opened by Viyayakanth). theater thirandhirundha pudhusu. enn appa oru pudhu theater thirandhu irukaanga, adhil DTS endru oru amsam pudhusa kondu vandhu irukaangannu solli koottittu ponaar. ANNAIKKU MAYANGIYAVANDHAAN NAAN…. andru mudhal K.S theater-in DTS-sukku naan rasigan aagi vittaen. (Andru mudhan mudhalili naan paartha padam “Evil Dead — Part III).
K.S. -ill enakku pidiththa vishyam… DTS. aahhaa… thaen amudhu adhu!!!. ahuvum DOLBY DIGITAL print-il padam pottaargall endraal padaththai naan 2,3 murai kooda paarthu rasiththu irukkiraen … just to enjoy the effect. effect endraall damaal dumeel mattum alla, THULLIYAM enbadhum adhil adangum enbadhai Salem makkall K.S moolamaagadhaan arindhu kodaargall endrall adhu migai aagaadhu!!
Pazhaya K.S-il enakku anaega padangal paartha nyaabagam. andha padap paadalgalayo, scene-galayo ippodhu tv-yil paarkum bodhu kooda enakku k.s-il padam paartha nyabagam dhan varum!!
List of movies i saw in K.S( a small list from what i could remember; List includes only movies in which DTS effect was superb in K.S):
Evil Dead Part-III
Jeans
Alai Paayudhae
Padayappa
Mission Impossible II
Species I & II
Rush Hour I & II
Mummy I & II
Gladiator
Pearl Harbor
Aalavandhaan…
… and the list goes on and on and on… i haven’t missed a single movie in K.S!!
Indraya Nilai:
ondrarai varudangalukku munbu niraya thamizh padangall tholvi adaindhadhu. appodhu theater nadathuvadhu enbadhae migavum kashtamagap poi vittadhu. podhaadha kuraikku ARRS multiplex veru vandhu vittadhu appodhu. enavae andha area makkall niraya paer andha theaterukku poda aarambichuttaanga. adhanaala K.S, ARK pondra theatergalin varumaanam kuraya aarambichudhu. Innoru kaaranam, ARRS-sukku ponaal oru padam ticket illannaa kooda innoru padathukku pogalangura ennamum makkalukku vara aarambichadhudhaan. Adhanaaladhaan Reliance ketta vudanae avanudaya theater pirivaana ADLABS-kku K.S theater owner 10 varushathukku lease-la vittu irukkaar. So this is the story how K.S Theater became ADLABS K.S!!
ADLABS K.S:
ADLABS vaanguna appuram theater appearance-la nalla maatram(seats, walls ellamae red colour apdidradhudhaan kandraavi !!). Ippo tickets ellaam internet-la kooda vaangalam. seats-kooda selection senjukkalaam.
ADLABS theater-a vaangi aanaaa DTS-sil periya maatram kondu vandhaanga. munbu irundha thulliyam ADLABS vaanguna appuram illa. adjustment ellaam maaththi vechutaanunga loosup pasanga!! Ippodhaan konjam konjamaa pazhaya nilamaikku thirumbi vandhukittu irukku. Kadasiyaa 2 vaaram munaadu ippo odura Seval padam paarththaen. DTS was good. Aanaa ennadhaan niraya niraya pudhu theaters Saleththula vandhaalum, ippo kooda K.S-nudaya thulliyamaana DTS-sa adichukku saleththula theater illa. not even ARRS.
BIG Cinemas K.S :
Recent-aa ippo ADLABS theater ellamae BIG Cinemas-nnu maathitaanga. so ADLABS K.S is now ” BIG CINEMAS K.S”. just a name change.
Internet booking website:
http://www.bigcinemas.com/index.asp
Mohan sir… ippo salem romba maariduchchu… cost of living has become so high since the arrrival of ADLABS and Odyssey in Salem. Theater-la tickets vilai ellam romba adhigam. K.S mattum dhaan first class Rs. 50. Maththa ADLABS-la RS. 85(first class). ARRS-la(Rs. 70).
Sathtula innum sila theaters kooda ADLABS lease-kku eduththu irukaanga….
KEERTHANA & RAMANA
KAILASH & PRAKASH
Ippo konjam konjamaa pazhaya nilaikku K.S-udaya DTS thrumbikittu irukradhunaala future-la innum kooda new technologies implement pannuvaangannu nambalam(may be digital projectors like other theaters in Salem)
Edhu eppadi irundhaalum Saleththula ALWAYS K.S ROCKS!!!
ARK Complex
ARK moodi 2 varusham aagudhu mohan sir.
ARK mooduna kaaranam unknown… however, following are some speculations/rumours!!!
1. Fight b/w the brothers who own the theaters.
2. Theater License problem with the government. Seems that the license has expired and there is problem in renewing it.
3. Latest news is that ADLABS are going to remodel these theaters too(like they did K.S and other theaters…). But work hasn’t started as yet.
Hi SivaShankar Anna,
I think the second point may be the reason for the closure.
Sorry Sivabhaskar Anna…Hi..Hi..
Velai senju thooka kalakkathula oru mappula pera maathi ezhuthitten…
அக்டோபர் 31, 2008 இல் 2:06 பிற்பகல்
Naan Iruken Annachi…
Aalavandhan,
Gemini, innum sila padangal (sattendru nyabagathirku varavillai)
paarthitukkiren. Intha theatril migavum piditha vishayam DTS Effect. Summa Adhirumilla…