மோகனின் எண்ணங்கள்

Archive for மே 2008

அடங்கொக்கமக்கா

Posted by: மோகன் on: மே 21, 2008

ஒரு அதிர்ஷ்டக்கல் நகைக்கடை விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. ஒரு தெருவில் கீழே பணக்கட்டு ஒன்று விழுந்திருக்கிறது. அவ்வழியே போகின்ற எவரும் அதை பார்க்க வில்லை (அல்லது எடுக்கவில்லை). ஆனால்  அதிர்ஷ்டக்கல் வைத்த மோதிரம் போட்ட ஒருவருக்கு மட்டும் அந்த பணம் இருப்பது தெரிந்து அதை எடுத்துக்கொள்கிறார். இதுவா அதிர்ஷ்டம்? பணக்கட்டை கீழே போட்டவர் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்?
என்னை பொருத்த வரையில் இந்த அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களே ஒரு கொடுமை. இவற்றை தடை செய்ய வேண்டும் என்று [...]

தென்னிந்தியா – தமிழகம்

Posted by: மோகன் on: மே 19, 2008

பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என்று குறிப்பிடுவது/கூப்பிடுவது வழக்கம்.  இது பொதுவாக தமிழகத்தை சாராதவர்களுக்கு பிடிக்காது என்று மட்டுமே அவர்கள் (தமிழகத்தை சாராதவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்த வரை  தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் கூட மதராசி என்று விளிப்பது பிடிக்காது. நம்மை பொருத்த வரையில் மதராசி என்பது நக்கலாக சொல்வதற்கும் கேலி செய்வதற்கும் வடக்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை. ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து பொதுவாக யாரும் “மதராசி” என்று உபயோகிப்பதில்லை.
அது போலவே சில ஊடகங்களில் தென்னிந்தியா [...]

பெடோரா லினக்ஸ்

Posted by: மோகன் on: மே 15, 2008

நான் எனது அலுவலக மடிக்கணினியில் லினக்ஸ் உபயோகப்படுத்துகிறேன் (எனது வேலையும் லினக்ஸில் தான்). கடந்த ஆறு மாதங்களாக பெடோரா (Fedora) 8 உபயோகித்து வந்தேன்.
இப்பொழுது பெடோரா (Fedora) 9 கிற்கு மாறி விட்டேன். நான் KDE 4 உபயோகப்படுத்துகிறேன்.
உங்களில் யாராவது லினக்ஸிற்கு மாற வேண்டுமென்று விருப்பமிருந்தால், என்னை கேளுங்கள். நான் உதவி செய்வதற்கு காத்திருக்கிறேன்.
லினக்ஸிற்கு புதியவர்கள் என்றால் நான் உபுண்டு (ubuntu) வை சிபாரிசு செய்கிறேன். உபுண்டு நிறுவுவது (install) மற்றும் configure செய்வது மிக எளிது. [...]

குறிச்சொற்கள்: , , ,

கர்நாடகாவில் தேர்தல் நடந்துக் கொண்டிருப்பதால், என்னுடைய கடந்த கால தேர்தல் அனுபவங்களை நினைவு கூர்கிறேன்.
நான் இதுவரைக்கும் மூன்று தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன். முதல் தேர்தல் கோவையில் நான் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தப்போது நடந்தது. அப்போது தேர்லுக்காக விடுமுறை விட்டார்கள். நானும் சேலம் வந்து என் வாக்கை பதிவு செய்தேன்.
பிறகு நான் சென்னையில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது இன்னொரு தேர்தல். அதற்கு நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.
அதுப்போல பெங்களூருவில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது அடுத்த [...]

சன் மியுசிக் ஒரிஜினல்?

Posted by: மோகன் on: மே 7, 2008

சன் மியுசிக் சேனலில் சமீப காலமாக “Sun Music Original, Not copy” என்ற விளம்பரத்தை அடிக்கடி காண முடிகிறது. இது புதிதாக ஆரம்பித்த இன்னொரு இசை தொலைக்காட்சியை கிண்டல் செய்வதற்கா என்பது எனக்கு தெரிய வில்லை.
ஆனால் சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?

குறிச்சொற்கள்: ,

KS தியேட்டர்

Posted by: மோகன் on: மே 7, 2008

KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS‌ தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS‌ தியேட்டரில் [...]

கணினி விசைப்பலகையில் இருக்கும் கிருமிகள், கழிவறை சீட்டிலுள்ள கிருமிகளை விட அதிகமாகவும் அபாயகரமானதாகவும் இருப்பத்தாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இனிமேல் வாந்தி பேதி பிரச்சினை வந்தால், அதற்கு உணவு மட்டும் காரணம் இல்லை, உங்கள் கணினி விசைப்பலகையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நீங்கள் கணினி பக்கம் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுபவராக இருந்தால், அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்களேன்.
உங்கள் கணினி விசைப்பலகையை அவ்வப்பொழுது துணியை வைத்து மிருதுவாக துடையுங்கள்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று சொல்வது போல, எந்த கணினி [...]

எனது நீதிமன்ற அனுபவம்

Posted by: மோகன் on: மே 3, 2008

கடந்த மாதம் சேலத்தில் (எனது சொந்த ஊர்) எனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்தப்போது, போக்குவரத்து காவலர்களால் சோதனைக்குள்ளாக்கப் பட்டேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் தவிர அனைத்து ஆவணங்களையும் அப்போது வைத்திருந்தேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் ஆவணம் வீட்டில் இருந்தததை காவலரிடம் சொல்ல, அவர் அதை எடுத்து வரச் சொன்னார். அதற்கு முன்பு என் வண்டியை அருகிலிருந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய் விட்டார். தவிற ஒரு கேஸ் [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,677 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters