Posted by: மோகன் on: April 27, 2008
தொலைக்காட்சியில் “யாரடி நீ மோகினி” படத்தின் சில காட்சிகளை காண நேர்ந்தது. கதைப்படி நயன்தாரா IT கம்பெனியில் வேலை செய்பவர். தனுஷ் புதிதாக அக்கம்பெனியில் சேருகிறார். நயன்தாரா அவருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். நயன்தாரா தனுஷிடம் நிறைய கோப்புகளை (folders) கொடுத்து படிக்க சொல்லுவார். தவிர சிலக்காட்சிகளில் தனுஷும் நயன்தாராவும் கோப்புகளோடு நடப்பர்.
எந்த IT கம்பெனியில் கோப்புகளை உபயோகிக்கிறார்கள்? IT கம்பெனியில் “folder” “directory” என்று பேசுவதை படம் சம்பந்தப்பட்டவர்கள் தவறாக புரிந்துக் கொண்டார்களா? அல்லது நான் தவறாக புரிந்துக் கொண்டேனா?
இதெல்லாம் சினிமாவுல சாதாரணமப்பா! இதுக்கெல்லாம் கொவிசுகிட்டா எப்படி ஐயா?
ஒரு வேளை
ட்ரைனிங் மெட்டீரியலாக இருக்குமோ
ஜூன் 26, 2008 இல் 3:14 மு.பகல்
நம்ப தமிழ் சினிமாகாரர்களுக்கு “Home work” என்பது கஷாயம் குடிப்பது போல! . இந்த முட்டாள்கள் (சில பேர்) படம் எடுத்து பலரை முட்டாள்கள் ஆக்குவது ஜீரணிக்க முடியாத விஷயம்.